தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Applications For Bed Special Courses Are Welcomed By Open Unversity

பிஎட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

Priyadarshini R HT Tamil
Feb 03, 2023 11:44 AM IST

பிஎட் சிறப்புக்கல்வி பட்டப்படிப்புக்கு பிப்ரவரி 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் பி.எட். சிறப்புக் கல்வி பட்டப்படிப்பை வெற்றிகரமாக தொலைநிலைக் கல்வி வாயிலாக நடத்திவரும் ஒரே பல்கலைக்கழகம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம். இந்தப் படிப்பு பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு மற்றும் இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும், இப்படிப்பு பி.எட். (பொது) பட்டத்துக்கு இணையானது என தமிழ்நாடு அரசால் (அரசாணை எண் 56) அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எட். சிறப்புக் கல்வி பட்டப்படிப்பை முடிப்பவர்கள் அரசு பொது மற்றும் சிறப்புப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளி என பணியாற்றலாம். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இந்தப் படிப்பை அரசு மற்றும் இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு முழுவதும் பரவலாக அமைந்துள்ள கல்வி மையங்கள் வாயிலாக நடத்தி வருகிறது.

2023ம் ஆண்டுக் கான பி.எட். சிறப்பு கல்வி படிப்புக்கான இணையவழி விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் கையேடு பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. 

இதில் சேர விரும்புவோர் பிப் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம், விளக்கக் கையேட்டை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இணையதளத்தில் ( www.tnou.ac.in) இருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 044- 24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்