Annapurani: ‘நான் சிவகங்கைகாரி.. தற்கொலைக்கு போனேன்’ அன்னபூரணி பரபரப்பு வீடியோ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annapurani: ‘நான் சிவகங்கைகாரி.. தற்கொலைக்கு போனேன்’ அன்னபூரணி பரபரப்பு வீடியோ!

Annapurani: ‘நான் சிவகங்கைகாரி.. தற்கொலைக்கு போனேன்’ அன்னபூரணி பரபரப்பு வீடியோ!

Stalin Navaneethakrishnan HT Tamil
May 25, 2023 11:42 AM IST

Annapurani Arasu Amma: அந்த நொடியில், அரசின் உடலில் இருந்து வெளியேறி உயிர் , என் உச்சந்தலை வழியாக இறங்கி, உள்ளங்கால் வரை பரவியது. இரண்டு இறை சக்தி ஒன்றோடு ஒன்றாக கலந்தது.

அன்னபூரணி
அன்னபூரணி

‘‘இறை சக்தி வரும் போது, நாலு கையோடு, நாலு காலோடு வானத்தில் இருந்து குதிப்பது இல்லை. அது மனித உருவத்தில் தான் வரும். வந்து தான் இறை சக்தியாக இருக்கோம் என்பதை உணர, பல பிரச்னைகளை கொடுக்கும்.

பிரச்னைகளை கொடுத்து தான், தான் இறை சக்தியாக இருக்கிறேன் என்பதை உணர வைக்கும். அப்படி தான், என்னோட வாழ்க்கையில் நடந்தது. என்னோட தனிப்பட்ட வாழ்க்கையை உங்களிடம் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஆனால், இப்போ என் வாழ்க்கை பொது வாழ்க்கையா மாறிடுச்சு. நானும் பொது வெளிக்கு வந்துட்டேன்.

மக்களுக்கு சேவை செய்ய தான் நான் வந்திருக்கேன். அதனால் சில விசயங்களை நான் உங்களிடம் தெளிவுபடுத்துறேன். இது முன்னாடியே சில மீடியாக்களில் என் பிறந்த ஊர், படிப்பு பற்றி கேட்ட போது, நான் சொல்லியிருப்பேன். எதையாவது செய்து என்னை அழிக்கலாம் என நினைத்ததால் அப்போது நான் அவற்றை சொல்லவில்லை.

இப்போ, எல்லா விசயத்தையும் வெளிப்படுத்துறேன். நான் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை. பழனியப்பன்-சீதை தம்பதிகளுக்கு 4வது பெண் குழந்தையாக பிறந்தேன். ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கிறேன். சிறுவயதில் எல்லாரையும் மாதிரி ஜாலியா படிப்பு, விளையாட்டு என இருந்தேன்.

19 வயதிலேயே எனக்கு திருமணம் பண்ணி வெச்சிட்டாங்க. அதன் பின் சென்னை வந்துவிட்டேன். அந்த வாழ்க்கை சரியில்லாத வாழ்க்கை. நிறைய பிரச்னை. என் பெற்றோரிடம் அந்த சூழ்நிலையை சொன்னேன். அப்போது பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு ஆதரவு தரமாட்டார்கள். என்ன பிரச்னை ஆனாலும் கணவர் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

அதனால் நிறைய பிரச்னைகளை கடந்து என் வாழ்க்கை போகும் போது, 2009ல் நானும் அரசும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை வருது. நாங்கள் இருவரும் சந்திக்கும் போது பூர்வஜென்ம பந்தத்தை உணர வைத்தது. எங்கள் இருவரையும் ஏதோ ஒரு அன்பு ஈர்த்தது. எங்களால் ஒருவரை விட்டு ஒருவர், பிரிந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு நிமிடம் கூட பிரிய முடியாத உணர்வு ஏற்பட்டது.

2010 நானும் அரசும் வீட்டு விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். என்னுடைய பெண் குழந்தையை மட்டும் அழைத்துக் கொண்டு திருமணம் செய்து, சந்தோசமாக கொண்டாட்டமா வாழ்ந்தோம். கூட எந்த சொத்தையும் எடுத்து செல்லவில்லை. எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ்க்கை போனாலும், முறையாக விவாகரத்து பெற்று எங்கள் வாழ்க்கையை தொடரலாம் என்று தான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு போனோம்.

அந்த நிகழ்ச்சி என்ன நீதிமன்றமா? என்று நீங்கள் கேட்கலாம். இயற்கை எங்களுக்கு என்ன உணர்த்தியதோ அதன் படி நாங்கள் சென்றோம். நிகழ்ச்சிக்கு போக உணர்த்தியது இயற்கை தான். அதையும் எங்களுக்கு வைத்த பரிட்சையாக தான் நாங்கள் இரண்டு பேரும் எடுத்துக் கொண்டோம். அங்கு நிறைய பிரச்னை நடந்தது. ஆனால் அதில் நிறைய கட் செய்து , திரித்து போட்டார்கள். இனி அதைப் பற்றி பேச வேண்டியதில்லை.

அதையும் சமாளித்து ஒருவரை ஒருவரை விட்டு கொடுக்காமல் சந்தோசமாக வாழ்ந்தோம். இருவர் தரப்பிலும் விவாகரத்து பெற்று முறைப்படி வாழ்ந்தோம். எந்த ஒரு கணவரும் மனைவியும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ முடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தோம்.

2016ல் என் கணவர் அரசுக்கு தீட்சை முறையை கொடுத்து ஆன்மிக பயிற்சிகள் கொடுத்தோம். என் கணவருக்கு நிறைய பக்தர்கள் இருந்தார்கள். 2019ல் அரசு இறந்தார். என்னால் அந்த கஷ்வத்தை, துயரத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வார்த்தையால் சொல்ல முடியாத வேதனையை அடைந்தேன். அவர் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாமல் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தேன்.

அந்த நொடியில் என் பெண் குழந்தை உறங்குவதை கண்டு முடிவை மாற்றினேன். இந்த சமுதாயத்தில் அந்த குழந்தையை தனியாக விட்டு செல்ல முடியாமல் முடிவை மாற்றினேன். மறுநாள் காலையில் அழுது கொண்டிருக்கும் போது அந்த நிகழ்வு நடந்தது. ஒரு படம் மாதிரி ஒரு காட்சி வெளிப்பட்டது. நானும் அரசும் ஜென்ம ஜென்மமாக என்ன பந்தத்தில் இருந்தோம், எதற்காக இந்த ஜென்மத்தில் இணைந்தோம், எதற்காக அரசு இறந்தார் என்பதை காட்சி மாதிரி வெளிப்படுத்தியது.

அந்த நொடியில், அரசின் உடலில் இருந்து வெளியேறி உயிர் , என் உச்சந்தலை வழியாக இறங்கி, உள்ளங்கால் வரை பரவியது. இரண்டு இறை சக்தி ஒன்றோடு ஒன்றாக கலந்தது. அந்த நிமிடம், அனைத்து விரக்தியும் விலகி, ஆனந்தமும், பரவசமும் நிரம்பியது. அதை வார்த்தையால் விவகரிக்க முடியாது. அதன் பின் அவர் பக்தர்களை நான் வழிநடத்த தொடங்கினேன்,’’
என்று அந்த வீடியோவில் அன்னபூரணி கூறியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.