தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  R.s.bharathi Vs Annamalai: 'ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்புவோம்'..கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்த அண்ணாமலை ஆவேசம்!

R.S.Bharathi vs Annamalai: 'ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்புவோம்'..கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்த அண்ணாமலை ஆவேசம்!

Karthikeyan S HT Tamil
Jul 10, 2024 02:23 PM IST

R.S.Bharathi vs Annamalai: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டோம் என்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்தார்.

R.S.Bharathi vs Annamalai: 'ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்புவோம்'.. கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்த அண்ணாமலை ஆவேசம்!
R.S.Bharathi vs Annamalai: 'ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்புவோம்'.. கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்த அண்ணாமலை ஆவேசம்!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரத்தில் கடந்த மாதம் விஷச்சாரயம் குடித்து 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் தற்போது வரை 66 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்லைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அதிமுக, பாஜக தலைவர்கள் வலியுறுத்தியது மட்டுமின்றி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

ஆர்.எஸ்.பாரதி பேட்டி

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், "கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி விஷயத்தில் பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலையின் சதி இருக்குமோ? என்ற சந்தேகம் இருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கு முன்பாக இப்படி செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டாரோ? என்ற சந்தேகம் என்னைப் போன்றோருக்கு எழுந்திருக்கிறது." எனத் தெரிவித்திருந்தார்.

மறுப்பு

ஆர்.எஸ். பாரதியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, "மன்னிப்பு கோர முடியாது. இழப்பீடு வழங்க முடியாது. வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி அதை சந்திக்க தயாராக உள்ளேன்." எனக் கூறியிருந்தார்.

மானநஷ்ட வழக்கு

இந்தநிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

அண்ணாமலை பேட்டி

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "நான் அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் யார் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்ததில்லை. ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லையை மீறி சென்றுவிட்டது. சீனியரான மனிதர் ஒருவர், திராவிட முன்னேற்ற காலம் முடிவிட்டது என்பதை தெரிந்துவிட்ட காரணமாக, அவருடைய வாயில் இந்த பேச்சுக்கள் வர ஆரம்பித்து விட்டது. ஆர்.எஸ்.பாரதி மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.

"சிறைக்கு அனுப்புவோம்"

அவரிடம் 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ளோம். ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் குடியால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு முகாம் அமைக்க உள்ளோம். தி.மு.கவினர் திட்டி திட்டி அரசியல் பண்ணிட்டு இருக்காங்க. பயந்து போய் சாமானிய மக்கள் தி.மு.க.வை எதிர்ப்பது கிடையாது. இந்த விஷயத்தில், நாங்கள் நிச்சயமாக ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்புவோம்.

அண்ணாமலை சவால்

என்னை சின்னப் பையன் என்று கூறிய ஆர் எஸ் பாரதி இப்போது இந்த வழக்கின் மூலம் நான் யார் என்பதை புரிந்து கொள்வார். ஆர்.எஸ்.பாரதியின் ராசியான கைரேகையை இந்த சின்ன பையன் என்ன செய்வான் என்பதை இனி பார்க்க போகிறீர்கள். கண்டிப்பாக அவர் தண்டிக்கப்படுவார். ஆர்.எஸ்.பாரதியையும் திமுகவையும் விடமாட்டோம். நாய்கூட பி.ஏ. படிக்கிறது என்று அவதூறாக அவர் பேசியதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.