தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Anbumani Ramadoss: 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

Anbumani Ramadoss: 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

Karthikeyan S HT Tamil
Jul 02, 2024 11:59 AM IST

Anbumani Ramadoss: அரசியலமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது தமிழ்நாடு அரசு உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Anbumani Ramadoss: 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!
Anbumani Ramadoss: 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

Anbumani Ramadoss, 69% Reservation: தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழக அரசு தயங்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோடை விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் வரும் 8ஆம் நாள் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு எந்த நேரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 69% இட ஒதுக்கீட்டின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் ஆபத்தை உணராமல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.