தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Ammk General Secretary Ttv Dhinakaran Condemned Former Aiadmk Minister Jayakumar

”சேற்றில் புரளும் எருமை” ஜெயக்குமாரை விளாசும் டிடிவி

Kathiravan V HT Tamil
Feb 09, 2023 02:42 PM IST

பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதில்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

ட்ரெண்டிங் செய்திகள்

கேள்வி:-  அமமுக முதலில் வாய்க்காலை தாண்டட்டும் பிறகு கடல் தாண்டுவதை பற்றி பேசலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி உள்ளாரே?

பதில்:- வாய்க்கொழுப்பில் மண்டைக்கணம் பிடித்து பேசுபவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

பேரறிஞர் அண்ணா சொன்னதைத்தான் நான் நேற்று ட்வீட் செய்து இருந்தேன் “வாய்க்கொழுப்பில் பேசும் வசவாளர்கள் பற்றி கவலைப்பட வேண்டாம், சேற்றில் புரளும் எருமையை பார்த்து நாம் அதுபோல் செய்வோமா, பிணம்தின்னி கழுகை பார்த்து கிளி போய் பிணம் திண்ணுமா?” 

அதுபோல் அம்மாவின் தொண்டர்களாகிய நாம் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என அண்ணா சொன்னதையே அவர்களுக்கு பதிலாக தெரிவித்துக் கொள்கிறேன். 

அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற பதவி இருந்த நிலையில் தன்னை ஈபிஎஸ் பொதுச்செயலாளர் என்கிறாரே?

பதில்:- சுயநலத்தில் பழனிசாமி செய்த தவறால்தான் அந்த சின்னம் செல்வாக்கை இழந்து போய் உள்ளது. நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா என்பது பழனிசாமி அகராதியில் நிரந்தரத்திற்கும் ஒரு எக்ஸ்பெயரி டேட் உள்ளது என்பதுதான், பன்னீர் செல்வத்தை ஏமாற்றி உள்ளார், தொண்டர்களை ஏமாற்றி உள்ளார், இதற்கெல்லாம் நிச்சயம் விடிவுகாலம் வரும்.

ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்?

பதில்:- எங்கள் தொண்டர்கள் திமுகவுக்கும் வாக்களிக்க மாட்டாரகள், துரோகிகளுக்கும் வாக்களிக்க மாட்டார்கள்

அதானி பிரச்னை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கிறதே?

பதில்:- அதானி பிரச்னை அரசியல் பிரச்னையாக மாறிவிட்டது. மத்திய அரசுதான் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். 

கேள்வி:- ஈபிஎஸ் - சசிகலா இணைவுக்கு வாய்ப்புள்ளதா? 

பதில்:- எடப்பாடி பழனிசாமியும் எங்கள் சித்தியிடமும் தான் கேட்க வேண்டும்.

கேள்வி:- பேனா நினைவுச்சின்னத்திற்கு தொடர் எதிர்ப்புகள் வந்துள்ளதே உங்கள் கருத்து என்ன?

பதில்:- கலைஞர் கருணாநிதிக்கு கொடுத்த இடத்தில் பேனா வைத்திருந்தால் பெரிய எதிர்ப்பு வந்து இருக்காது. திமுக ஆட்சிக்கு வரும்போதே 7 லட்சம் கோடிக்கு அரசுக்கு கடன் இருந்தது. இதனால்தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றி வருகிறார். தங்கள் சொந்தப்பணத்தில் அறிவாலயத்திலோ, கருணாநிதி நினைவிடத்திலோ வைத்தால் எந்த பிரச்னையும் இல்லை. பேனா சின்னம் வைப்பது முதலமைச்சரின் தவறான முடிவு.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்