ADMK Poster: 'வருங்கால பிரதமர் எடப்பாடியார்' - அதிமுக போஸ்டரால் பாஜக அதிர்ச்சி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk Poster: 'வருங்கால பிரதமர் எடப்பாடியார்' - அதிமுக போஸ்டரால் பாஜக அதிர்ச்சி!

ADMK Poster: 'வருங்கால பிரதமர் எடப்பாடியார்' - அதிமுக போஸ்டரால் பாஜக அதிர்ச்சி!

Karthikeyan S HT Tamil
Aug 15, 2023 02:38 PM IST

பாஜக, அதிமுக கூட்டணி தொடரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி வருங்கால பிரதமர் என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிமுக போஸ்டர்
அதிமுக போஸ்டர்

மாநாட்டையொட்டி புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சியில் அதிமுக வரலாறு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திரைப்படம், அரசியல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இடம்பெற உள்ளன. தொண்டர்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இடைவிடாது உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு வரும்படி மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 10,000 குடும்பங்களுக்கு 'வீடுதோறும் இலை' என்ற தலைப்பின் கீழ் மரக்கன்றுடன் மாநாட்டு அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்து வருகின்றனர். மாநாட்டில் எழுச்சி உரையாற்ற உள்ள எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவைகளை அதிமுகவினர் ஒட்டி வரும் சூழலில் ‘வருங்கால பாரத பிரதமர் எடப்பாடியார்’ என்ற வாசகம் இடம்பெற்ற போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருப்பது தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் மணலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிமாறன், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மதுரை, சிவகங்கை மாவட்டப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி வருகிறார். அதில், ‘வருங்கால பாரத பிரதமர் எடப்பாடியார்’ என நாடாளுமன்ற பின்னணியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். இது சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பாஜ தரப்பில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மணிமாறன் கூறுகையில், "மதுரையில் 20ஆம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கு 20 லட்சம் பேர் வரை வருவார்கள். உலகமே திரும்பி பார்க்கும் வகையில் மாநாடு நடைபெற உள்ளது. எடப்பாடி முதலமைச்சர் அல்ல. பிரதமர், ஜனாதிபதியாகும் அளவிற்கு தகுதி உள்ளது’’ என்றார். அப்போது செய்தியாளர்கள், "பாஜk உடன் கூட்டணி என்றாலும் எடப்பாடிதான் பிரதமரா" என கேட்டபோது, "ஆமாம். எங்களுக்கு ஆசை உள்ளது" என்றார். பாஜக, அதிமுக கூட்டணி தொடரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி வருங்கால பிரதமர் என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.