Actress Kasthuri : இரட்டை வேடம் இதுதான் திராவிட மாடல் - விளாசும் கஸ்தூரி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Actress Kasthuri : இரட்டை வேடம் இதுதான் திராவிட மாடல் - விளாசும் கஸ்தூரி!

Actress Kasthuri : இரட்டை வேடம் இதுதான் திராவிட மாடல் - விளாசும் கஸ்தூரி!

Divya Sekar HT Tamil
Dec 12, 2022 06:55 AM IST

மேயர் பிரியா முதல்வரின் கான்வாயில் நின்றபடியே பயணித்த நிலையில் இதற்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து முதல்வரின் பாதுகாப்பு கான்வாய் வாகனம் அங்கிருந்து புறப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா அதில் தொங்கியபடியே பயணித்தார். முதல்வரின் கான்வாய் வாகனத்தின் இடதுபுறத்தில் மேயர் பிரியா நின்றுகொண்டே பயணித்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், முதல்வரின் கான்வாயில் நின்றபடியே பயணிக்கும் மேயர் பிரியா தனது முகத்தையும் மறைக்க முயற்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இது மட்டுமின்றி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் முதல்வரின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடியே பயணித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில், “நான் இன்று உடன்பிறப்புக்களுக்கு விசிறியாகி விட்டேன். உண்மையாக. பட்டில் இத்தனை விதமா , பட்டு மாளிகை என்றெல்லாம் என்று டி நகரில் விளம்பரப்படுத்துவார்கள்.இனி முட்டில் இத்தனை விதமா?முட்டு மன்னர்கள் என்று கெத்தாக காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம் திமுக கூட்டணியினர். இதையே வேறு யாரும் செய்திருந்தால்... பெண்ணியம் என்று கும்மியிருப்பார்கள் பெரியாரிஸ்டுகள். மாண்டோஸ் புயலைவிட விட பெரிய புயலை கிளப்பியிருப்பார்கள்.

சிறுத்தைகள் ஒரு பக்கம் PCA case போட்டு கொடும்பாவி கொளுத்தியிருப்பார்கள். ஆனால் என்ன பண்ணுறது, VMSS எல்லாவற்றையும் விழுங்கிக்கொண்டு பிதுக்கினாலும் ஒதுக்கினாலும் மூடிக்கொண்டு பொறுத்து போக வேண்டிய நிலை இப்பொழுது ! ப்ரியா இடத்தில் கனிமொழி வருவாரா ? அப்படி வந்தால் இப்படித்தான் ஆஹா சிங்க பெண், என்னமா சர்க்கஸ் செய்யுது என்று புளங்காகிதம் அடைவார்களா உடன்பிறப்புகள் ? மூத்த வயதில் மதிப்புக்குரிய IAS அதிகாரி, மாநகராட்சி கமிஷனர், footboard இல் தொத்தி கொண்டு போனார் பாவம். இத்தனை வருட நேர்மைக்கும் சேவைக்கும் கடைசியில் அவருக்கு கிடைத்தது footboard தான். அதை இளைஞர்கள் உதயநிதியோ சபரீசனோ செய்வார்கள் என்று கனவிலும் நினைத்து பார்க்க முடியுமா?

அப்போ ஊருக்கு உபதேசம் உள்ளுக்குள் இரட்டை வேடம் இதுதான் திராவிட மாடல் என்றுதான் புரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது.இந்த அரசுதான் traffic fines எல்லாத்தையும் ஏத்தினாங்க. ஹெல்மெட் போடலைனா சீட் பெல்ட் போடலையின்னா ஆயிர கணக்கில் வசூலிக்கும் போலீஸ் , வெறும் கருப்பு கண்ணாடிக்கு நடிகர் விஜய்க்கு அபராதம் போட்ட கடமையுணர்வுமிக்க சென்னை போலீஸ், இப்போ இந்த கூத்துக்கு பாதுகாப்பு அல்லவா குடுத்திச்சு! ஆக... மொத்தத்தில் திராவிட மாடல் என்பது பெண்களை , IAS அதிகாரிகளை, சாலை விதிகளை எல்லாவற்றையும் அவமதித்து மக்களுக்கு தவறான ஆபத்தான முன்னுதாரணமாக இருப்பதுதானா என்று மக்கள் அங்கலாய்ப்பதில் ஆச்சரியம் என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.