ஜி.எஸ்.டி எதிரொலி! ஆவின் பொருட்கள் அதிரடி விலை உயர்வு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஜி.எஸ்.டி எதிரொலி! ஆவின் பொருட்கள் அதிரடி விலை உயர்வு

ஜி.எஸ்.டி எதிரொலி! ஆவின் பொருட்கள் அதிரடி விலை உயர்வு

Karthikeyan S HT Tamil
Jul 21, 2022 04:13 PM IST

ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

<p>ஆவின் பொருட்கள் விலை உயர்வு</p>
<p>ஆவின் பொருட்கள் விலை உயர்வு</p>

சண்டிகரில் சமீபத்தில் நடந்த 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், பாக்கெட் மற்றும் பிராண்டுடன் விற்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை, தயிர், மோர், லஸ்சி, உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 18 ஆம் தேதி முதல் 5 சதவிகித ஜி.எஸ்.டி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. அரிசி விலை உயர்ந்த நிலையில் தற்போது பால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் தயிர், மோர், லஸ்ஸி, பன்னீர் ஆகியவற்றின் விலையை ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனமும் இன்று முதல் தயிர், லஸ்ஸி, நெய் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆவின் தயிர் 100 கிராம் ரூ.10லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 200 கிராம் தயிர் விலை ரூ.25-ல் இருந்து 28 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தயிர் அரை லிட்டர் ரூ.30லிருந்து ரூ.35 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் பிரீமியம் தயிர் ஒரு லிட்டர் ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. புரோபயாடிக் லஸ்ஸி ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் நெய் ஒரு லிட்டர் விலை ரூ.530-ல் இருந்து ரூ.580 ஆக 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அரை லிட்டர் நெய் ரூ.15 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 200 மி நெய் ரூ.10-ம், 100 மி நெய் ரூ.5-ம் உயர்த்தப்படுவதாகவும், 15 கிலோ நெய் டின் ரூ.8680-ல் இருந்து 9680 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அரிசி விலை உயர்ந்த நிலையில் தற்போது பால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.