தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  22 Cm Heavy Rain Recorded In Sirkazhi, Mayiladuthurai District

Very Heavy Rain: சீர்காழியில் 22 செ.மீ! திருவாரூரில் 21.செ.மீ! அதிரவிட்ட அதிகனமழை!

Kathiravan V HT Tamil
Jan 08, 2024 06:43 AM IST

”திருவாரூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு”

சீர்காழியில் 22 செ.மீ மழை பதிவு
சீர்காழியில் 22 செ.மீ மழை பதிவு

ட்ரெண்டிங் செய்திகள்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக இன்றைய தினம் (08.01.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. 

தொடர் கனமழையின் காரணமாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர் வட்டங்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். 

யூனியன் பிரதேசமான புதுச்சேரியை பொறுத்தவரை புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டுமும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 22 செ.மீ மழை பதிவாகி உள்ளது. கொள்ளிடத்தில் 17.9 செ.மீ மழையும் மணல்மேடு பகுதியில் 10.5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. மேலும் கொள்ளிடம் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் வட்டத்தில் 21.2 செமீ, நன்னிலத்தில் 16.4 செ.மீ, குடவாசலில் 13.4 செ.மீ மழை பதிவாகி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

IPL_Entry_Point