Loksabha Election 2024: ’மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள்!’ ஸ்டாலின் - கே.பாலகிருஷ்ணன் இடையே கையெழுத்தானது!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Loksabha Election 2024: ’மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள்!’ ஸ்டாலின் - கே.பாலகிருஷ்ணன் இடையே கையெழுத்தானது!

Loksabha Election 2024: ’மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள்!’ ஸ்டாலின் - கே.பாலகிருஷ்ணன் இடையே கையெழுத்தானது!

Kathiravan V HT Tamil
Feb 29, 2024 05:31 PM IST

அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு
திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வரும் மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து வருகிறது.

இதில் ஏற்கெனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்து தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 2 நாடாளுமன்றத் தொகுதிகளை திமுக ஒதுக்கி உள்ளது. 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மகத்தான முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் உள்ள கூட்டணி பாஜகவை முழுமையாக வீழ்த்தி உள்ளது. 2019ஆம் ஆண்டில் ஒரே தொகுதியில் அந்த கூட்டணி வென்றது. ஆனால் வரும் தேர்தலில், பாஜக, அதிமுக கட்சிகள் 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைவதுடன், அவர்களை டெப்பாசிட் இழக்க செய்யும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும்.

திமுக உடன் கடந்த 2 முறை பேச்சுவார்த்தை நடந்தது, ஏற்கெனவே 2 இடங்களில் வென்ற நிலையில் கூடுதல் இடங்களை கேட்டோம். ஆனால் புதிய கட்சிகள் வர உள்ளதால் 2 தொகுதிகளுக்கு உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அடுத்து பல கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்ட பிறகு எந்தெந்த தொகுதிகள் யாருக்கு என்பது முடிவு செய்யப்படும். ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ள மதுரை, கோவை தொகுதிகளை வர்புறுத்தி கேட்டுள்ளோம். ஒரே தொகுதியை வேறு சில கட்சிகளும் கேட்டுள்ளார்கள். 

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.