தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ”சித்தி இந்த இடத்தில் பயங்கரமா வலிக்குது” காத்திருந்த அதிர்ச்சி.. சிறுமியை 6 மாதங்களாக பாலியில் தொந்தரவு செய்த குமபல்!

”சித்தி இந்த இடத்தில் பயங்கரமா வலிக்குது” காத்திருந்த அதிர்ச்சி.. சிறுமியை 6 மாதங்களாக பாலியில் தொந்தரவு செய்த குமபல்!

Divya Sekar HT Tamil
May 28, 2024 12:07 PM IST

சென்னை வில்லிவாக்கம் காவல்நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் வசித்து வரும் 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களாக பாலியில் தொந்தரவு செய்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

”சித்தி இந்த இடத்தில் பயங்கரமா வலிக்குது”  காத்திருந்த அதிர்ச்சி.. சிறுமியை 6 மாதங்களாக பாலியில் தொந்தரவு செய்த குமபல்!
”சித்தி இந்த இடத்தில் பயங்கரமா வலிக்குது” காத்திருந்த அதிர்ச்சி.. சிறுமியை 6 மாதங்களாக பாலியில் தொந்தரவு செய்த குமபல்!

ட்ரெண்டிங் செய்திகள்

தாய் - தந்தை மதுபோதைக்கு அடிமையானதால் நேர்ந்த கொடுமை

தாய் - தந்தை இருவரும் மதுபோதைக்கு அடிமையானதால் இந்த நிலைக்கு சிறுமி தள்ளப்பட்ட கூறப்படுகிறது. சென்னை வில்லிவாக்கம் காவல்நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் வசித்து வரும் பெற்றோர்கள் மதுபோதைக்கு அடிமையானவர்கள் எனக்கூறப்படுகிறது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

மூத்த மகள் அரசு பள்ளி ஒன்றில் 5 வகுப்பு முடித்து 6 வகுப்புக்கு செல்ல உள்ளார். 11 வயதான இந்த சிறுமி நேற்று தனது திருவேற்காடு பகுதியில் வசிக்கும் சித்தியிடம் தனக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் பிறப்புறுப்பில் வலிப்பதாகவும், தனது பெரியப்பா மகன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தொடர்ந்து இது போன்று நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக சிறுமி பாலியில் துஷ்பிரோயகம்

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது சித்தி, தனது தாயாரிடம் தகவலை தெரிவித்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் நீண்ட நாட்களாக சிறுமி பாலியில் துஷ்பிரோயகம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து சிறுமியின் பாட்டி வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சிறுமியை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. சிறுமியிடம் முதலில் 16 வயதே ஆன பெரியப்பா மகன் திண்பண்டங்களை வாங்கி கொடுத்து சிறுமியை சீரழித்துள்ளதும் அதனை எதிர்வீட்டில் இருக்கும் மற்றோரு 16 வயது சிறுவன் பார்த்து சிறுமியை மிரட்டி சீரழித்தும் தெரியவந்துள்ளது.

மூவரை கைது செய்து விசாரணை

அதே போல அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வரும் டெய்லர் குமார் என்பவனும் சிறுமியை சீரழித்துள்ளதும் தெரியவந்துள்ளது. பெரியப்பா மகனின் நண்பன் என பலர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளதும், கடந்த 6 மாதங்களாக இந்த வேதனைகளை அனுபவித்து வரும் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க முயன்ற போது அவர்கள் மதுபோதையில் அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் நேற்றும் தன்னிடம் தவறாக நடந்தால் தன்னால் வலி தாங்க முடியாமல் தனது சித்தியை சந்தித்து கூறியதாகவும் வேதனையோடு சிறுமி கூறியுள்ளார்.

போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் பெரியப்பா மகன், பக்கத்து வீட்டு சிறுவன், டெய்லர் குமார் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், சிகிச்சை அளிக்கவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் வேறு யாரெல்லாம் இது போன்று சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர் என்ற விசாரணையை வில்லிவாக்கம் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களாக பாலியில் தொந்தரவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்