தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  R.n.ravi: சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய 178 பேர் மீது வழக்கு பதிவு

R.N.Ravi: சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய 178 பேர் மீது வழக்கு பதிவு

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 12, 2024 08:15 AM IST

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்துக்கு நேற்று வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 178 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய 178 பேர் மீது வழக்கு பதிவு
சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய 178 பேர் மீது வழக்கு பதிவு

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்துக்கு நேற்று வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆட்சிக்குழு கூட்ட அரங்கில் நடைபெறும் இந்த ஆய்வு கூட்டத்தில் 27 துறை தலைவர்கள் பங்கேற்றனர். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா, தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க மட்டுமே இதுவரை ஆளுநர் வந்த நிலையில் தற்போது எந்தவொரு நிகழ்ச்சியும் இல்லாமல் ஆளுநர் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க நேரில் வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம் 10 நிமிடங்களில் முடிவடைந்தது.

தொடர்ந்து புகாருக்குள்ளான துணைவேந்தர் ஜெகநாதனுடன் சுமார் 25 நிமிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசி உள்ளார். பின்னர் ஆய்வு கூட்டம் முடிந்து ஆளுநர் ஆர்.என். ரவி விருந்தினர் மாளிகைக்கு மதிய உணவுக்கு சென்றார்.துணை வேந்தர் மீதான முறைகேடு புகார், கைது நடவடிக்கை, பல்கலை கழகத்தில் நடைபெற்ற போலீஸ் சோதனை உள்ளிட்டவை குறித்து ஆளுநர் ரவி, துணை வேந்தர் ஜெகநாதனிடம் விளக்கம் கேட்டறிந்தார் என கூறப்படுகிறது.

அப்போது குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள பல்கலைக்கழக துணை வேந்தரை ஆளுநர் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர், பல்வேறு கட்சியினர் கருப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய இந்திய மாணவர் சங்கத்தினர், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு சாலை வழியாக சேலத்திலிருந்து கோவைக்கு ஆளுநர் சென்றபோது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் நேற்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த ஆளுநர் ஆரன் ரவிக்கு எதிராக பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் எழுந்த நிலையில் ஆளுநர் வருகையின் போது எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கருப்பு கொடிகள் உடன் சட்டவிரோதமாக கூடியதாக கோட்டை கவுண்டம்பட்டி விஏஓ மோகன் கொடுத்த புகாரின் பேரில் கருப்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய 178 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்