தமிழ் செய்திகள்  /  Sports  /  Wpl Eliminator: Issy Wong Historic Hat Trick Leads Mumbai To Wpl Final

WPL Eliminator: ஹாட்ரிக் வீழ்த்தி வரலாறு படைத்த வோங்! பைனலில் மும்பை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 24, 2023 11:51 PM IST

மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக் வீழ்த்திய பெளலர் என்ற பெருமையை பெற்ற இஸ்ஸி வோங், மும்பை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பெறுவதற்கு காரணமாக அமைந்தார். இறுதி போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ்.

சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் பெளலர் இஸ்ஸி வோங்-ஐ பாராட்டும் சக வீராங்கனைகள்
சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் பெளலர் இஸ்ஸி வோங்-ஐ பாராட்டும் சக வீராங்கனைகள் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் அந்த அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. டாப் ஆர்டர் பேட்டர்கள் ஸ்வேதா செஹ்ராவத் 1, கேப்டன் அலிசா ஹீலி 11 ரன்னில் அவுட்டாகினர். சிறிது நேரம் கழித்து தஹிலா மெக்ராத் 7 ரன்னில் நடையை கட்ட, மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார் கிரண் நவ்கிரே. அவருடன் க்ரேஸ் ஹாரிஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனாலும் இந்த இணை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஹாரிஸ் 14 ரன்னில் அவுட்டானார்.

ஒரு புறம் விக்கெட்டுகளை சரிந்தாலும் பவுண்டரி, சிக்ஸர் என அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிரண் நவ்கிரே 43 ரன் எடுத்தபோது, மும்பை வேகப்பந்து வீச்சாளர் வோங் அவரது விக்கெட்டு தூக்கினார்.  அவரது விக்கெட்டோடு இல்லாமல் சிம்ரன் ஷேக், சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோரின் விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து வீழ்த்தி, மகளிர் ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

யுபி வாரியர்ஸ் தோல்வி உறுதியான நிலையில், அனைத்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்ந்தபோதிலும் பொறுமையாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்த தீப்தி ஷர்மா, 16 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இவரைத்தொடர்ந்து அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வர் கெய்க்வாட் ஆகியோரும் நடையகட்ட 17.4 ஓவரில் 110 ரன்களுக்கு யுபி வாரியர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 72 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

வேகத்தால் மிரட்டிய இஸ்ஸி வோங் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் கலக்கிய நாட் ஸ்கிவர்-பிரண்ட், பந்துவீச்சிலும் ஒரு விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகி விருதை தட்டி சென்றார்.

முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்ல கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையே பார்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்