WPL 2023: இன்னிக்கு 2 WPL மேட்ச்.. பதிலடி கொடுக்க காத்திருக்கும் 2 அணிகள்!
Women Premier Leauge: மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
குஜராத் ஜெயன்ட்ஸ்-யு.பி.வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
குஜராத் அணி 7 ஆட்டங்களில் விளையாடி அதில் 2 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ், யு.பி.வாரியர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுடன் தோல்வியை சந்தித்துள்ளது குஜராத்.
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 2 முறையும் தோல்வியைத் தழுவியது. யு.பி. வாரியர்ஸை கடந்த 5ம் தேதி எதிர்கொண்டது. அந்த ஆட்டத்திலும் குஜராத் தோல்வி அடைந்தது.
தற்போது மீண்டும் அதே அணியுடன் மோதுகிறது. இந்த முறை பதிலடி கொடுக்க நிச்சயம் முனையும். அதேநேரம் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள யு.பி அணி கட்டாயம் வெற்றி பெற போராடும்.
பதிலடி கொடுக்குமா டெல்லி?
இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மோதுகிறது.
தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறு நடை போட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது மும்பை.
அந்த அணியை கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் வீழ்த்தியது யு.பி.வாரியர்ஸ். தற்போது மெக் லான்னிங் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் கோதாவில் குதிக்கிறது.
ஏற்கனவே டெல்லி அணியை மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தற்போது அதற்கு பதிலடி கொடுக்க டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முந்தைய ஆட்டத்தில் பட்ட தோல்விக்கு ஆறுதல் தேட முயற்சிப்பார்.
நவி மும்பை ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள குஜராத் ஜெயன்ட்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் வெல்வதற்கு நிச்சயம் முயற்சி எடுக்கும் என்பதால் 2 ஆட்டங்களிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஜியோ சினிமாவில் 2 ஆட்டங்களும் நேரலையில் ஒளிபரப்பாகும்.
டாபிக்ஸ்