Virat Kohli: ‘அதனால தான் நான் ‘கிங்’ கோலி..’ ஆஸி.,க்கு எதிராக கோலி புதிய சாதனை!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Virat Kohli: ‘அதனால தான் நான் ‘கிங்’ கோலி..’ ஆஸி.,க்கு எதிராக கோலி புதிய சாதனை!

Virat Kohli: ‘அதனால தான் நான் ‘கிங்’ கோலி..’ ஆஸி.,க்கு எதிராக கோலி புதிய சாதனை!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jun 11, 2023 06:05 AM IST

அவர் எடுத்த இந்த ரன்கள் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் கோலி இணைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 2000 ரன்களை கடந்த 5வது வீராக இணைந்தார் விராட் கோலி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 2000 ரன்களை கடந்த 5வது வீராக இணைந்தார் விராட் கோலி (AFP)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 4-வது நாள் முடிவில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 44 (60) ரன்கள் எடுத்தார். சாத்தியமில்லாத வெற்றிக்கான இந்தியாவின் நம்பிக்கையை இது உயிர்ப்புடன் வைத்தது. அவர் எடுத்த இந்த ரன்கள் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் கோலி இணைந்துள்ளார். இந்த முறை கோலிக்கு 5 வது இடம் கிடைத்துள்ளது. 

'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3,630 ரன்கள் குவித்த சாதனையை இன்னும் வைத்திருக்கிறார். விவிஎஸ் லட்சுமண் 2,434 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2,143 ரன்கள் குவித்துள்ள தற்போதைய இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அனுபவமிக்க சேட்டேஷ்வர் புஜாரா 2,074 ரன்களுடன் பட்டியலில் நான்காவது பேட்டர் ஆவார். விராட் கோலி 2,037* ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

இதற்கிடையில், WTC இறுதிப் போட்டியின் 4 வது நாள் ஆட்டத்தில் யாருக்கு வெற்றி என்கிற கோதாவில், விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் தங்கள் வசம் என்று கூறி, நான்காவது நாளை முடித்துள்ளனர்.

4 ம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 40 ஓவர்களில் 164/3 என்று இருந்தது. அஜிங்க்யா ரஹானே மற்றும் விராட் கோலி முறையே 20(59)* மற்றும் 44(6)* ரன்களுடன் கிரீஸில் இருந்தனர்.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில்  ஷுப்மான் கில் விக்கெட் வீழ்ந்த போது, ​​ரோஹித் ஷர்மா மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் இணைந்த போது, இந்தியா மீண்டும் எழுச்சி பெற்றது. அவ்வப்போது பவுண்டரிகள் வந்து கொண்டிருந்த போது, 20வது ஓவரில் 43(60) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித்தை நேதன் லியான் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்தது. 

அடுத்த ஓவரில் பாட் கம்மின்ஸ் புஜாராவை ஆட்டமிழக்கச் செய்தார். அவர் கீப்பரின் தலைக்கு மேல் ஒரு வழக்கத்திற்கு மாறான ஷாட்டை விளையாட முயன்றார், ஆனால் அது நேராக கேரியின் கைகளில் விழுந்தது.

அதன் பின் இணைந்த ரஹானே மற்றும் கோலி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை தங்கள் தற்காப்பு திறமை மற்றும் தாக்குதல் ஷாட்களால் அடக்கினர். இறுதியில் இருவரும் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் உடன் களத்தில் நின்று, இந்திய அணியின் வெற்றிக்கான நம்பிக்கையை தந்துள்ளனர். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.