Umesh Yadav: கிளீன் பவுல்டு.. சொந்த மண்ணில் ‘Strongman’ உமேஷ் சாதனை!
India vs Australia 3rd Test: சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் உமேஷ் யாதவ் மட்டுமே விக்கெட்டுகளை அள்ளினார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸி., சுழலில் சிக்கி 109 ரன்களில் முதல் நாளிலேயே சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆஸி., எப்படியோ 197 ரன்கள் வரை வந்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து 88 ரன்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இந்தியா விளையாடி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது.
மளமளவென விக்கெட்டுகள் சரிந்து வருகிறது. ரோகித் சர்மா 12 ரன்களுடனும், சுப்மன் கில் 5 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
ஜடேஜா 7 ரன்னில் ஏமாற்றினார். விராட் கோலியும் சோபிக்கத் தவறினார். ஸ்ரேயஸ் ஐயர் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெஸ்டில் கிங்கான புஜாரா நிதானமாக விளையாடி அரை சதம் விளாயிருக்கிறார்.
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பந்துவீசியபோது இன்றைய நாளில் அஸ்வினும், உமேஷ் யாதவும் கலக்கினர்.
இருவரும் தலா 3 விக்கெட்டுகளை சுருட்டினர்.
உமேஷ் யாதவ் சாதனை
இந்திய பந்துவீச்சாளரும், Strongman என்ற செல்லப் பெயர் கொண்டவருமான உமேஷ் யாதவ், கிரீன் விக்கெட்டை வீழ்த்தினார். அது இந்திய மண்ணில் அவரது 99வது விக்கெட்டாக இருந்தது. இதையடுத்து 73.3ஆவது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் விக்கெட்டை கைப்பற்றினார். இது கிளீன் பவுல்டாக அமைந்தது.
இது இந்திய மண்ணில் அவரது 100வது விக்கெட்டாக பதிவானது. அதன்பிறகு 75.3வது ஓவரில் முர்பி விக்கெட்டையும் கைப்பற்றினார்.
5 ஓவர்கள் வீசிய உமேஷ் யாதவ், 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இவர் மட்டுமே விக்கெட்டுகளை அள்ளினார்.
சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இந்திய பவுலர் ஆனார் உமேஷ் யாதவ்.
இதற்கு முன் கபில் தேவ் (219 விக்கெட்டுகள்), ஜவகல் ஸ்ரீநாத் (108), ஜாஹீர் கான் (104), இஷாந்த் சர்மா (104) ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
அதேநேரம், சொந்த மண்ணில் 100 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர்களின் பட்டியலில் 13வது இடத்தைப் பிடித்தார் உமேஷ் யாதவ்.
டாபிக்ஸ்