WPL: ‘MEG-A STAR' லான்னிங்! மேலும் 4 அணிகளின் கேப்டன் யார் யார் தெரியுமா?
WIPL: மெக் லான்னிங் தான் அந்த அணியை வழிநடத்தி 6வது முறையாக அந்த அணியை சாம்பியன் பட்டத்தை பெற உதவியிருக்கிறார்.
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் லானிங் வழிநடத்துகிறார்.
இதற்கான அறிவிப்பை டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெளியிட்டது.
சமீபத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மெக் லான்னிங் தான் அந்த அணியை வழிநடத்தி 6வது முறையாக அந்த அணியை சாம்பியன் பட்டத்தை பெற உதவியிருக்கிறார்.
30 வயதான மெக் லான்னிங், டெல்லி அணிக்காக ரூ.1.1 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். 132 சர்வதேச டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணியை 100 ஆட்டங்களில் இவர் கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.
இதுவரை இத்தனை டி20 ஆட்டங்களில் ஒரு அணியை வழிநடத்திய வீராங்கனைகள் வேறு யாருமே இல்லை.
அத்துடன், டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் மெக் லான்னிங். அதில் 2 சதங்கள், 15 அரை சதங்கள் அடங்கும். 50 ஓவர் கிரிக்கெட்டில் 15 சதங்கள், 21 அரை சதங்களை விளாசியிருக்கிறார் மெக் லான்னிங்.
கேப்டனாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கூறுகையில், "இது மிகவும் பெருமைக்குரிய தருணமாக கருதுகிறேன். டெல்லி அணிக்காக முதலில் தேர்வானதும், தற்போது அந்த அணியை வழிநடத்த இருப்பதும் நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன். விளையாட்டுத் துறைக்கு மகளிர் ப்ரீமியர் லீக் மிகப் பெரிய முன்னெடுப்பாக இருக்கும். இந்தியாவைப் பொருத்தவரை கிரிக்கெட் மக்களோடு கலந்து இருக்கிறது.
இந்தத் தொடரில் நானும் விளையாடப் போகிறேன் என்பதை நினைக்கும்போது உற்சாகமாக உணர்கிறேன். எதிர்வரும் ஆண்டுகளில் இன்னும் WPL அடுத்தகட்டத்தை நோக்கி நகரவுள்ளது.
ஆஸி., வீராங்கனைகளான பெத் மூனி குஜராத் ஜெயன்ட்ஸ் அணியையும், அலிசா ஹெலே உபி வாரியர்ஸையும் வழிநடத்துகின்றனர்.
5 முறை உலகக் கோப்பை வின்னரான லான்னிங்குக்கு துணை கேப்டனாக இந்தியாவின் ஜெமிமா ராட்ரிக்ஸ் இருப்பார். மார்ச் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை டெல்லி கேபிட்டல்ஸ் அணி எதிர்கொள்கிறது.
பெங்களூர் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் இருக்கிறார்.
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடைபெற்றது. ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட்டைப் போல இந்த ஆண்டு மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் அறிமுகம் செய்யப்படுகிறது. 15 நாடுகளைச் சேர்ந்த 448 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
மார்ச் 4ம் தேதி தொடங்கு மகளிர் ஐபிஎல் போட்டி, மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்