தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ultimate Kho Kho: அல்டிமேட் கோ கோ சீசன் 2: சென்னை குயிக் கன்ஸ் முதல் வெற்றி!

Ultimate Kho Kho: அல்டிமேட் கோ கோ சீசன் 2: சென்னை குயிக் கன்ஸ் முதல் வெற்றி!

Manigandan K T HT Tamil
Dec 26, 2023 12:12 PM IST

நேற்று மூன்றாவது ஆட்டத்தில் ராஜஸ்தானும், குஜராத் ஜெயன்ட்ஸும் மோதின. இதில் 41-30 என்ற கணக்கில் குஜராத் ஜெயித்தது. 11 பாயிண்ட்கள் வித்தியாசத்தில் குஜராத் வென்றது.

அல்டிமேட் கோகா ஆட்டத்தில் மோதிய சென்னை குயிக் கன்ஸ்-தெலுங்கு யோத்தாஸ் அணியினர்
அல்டிமேட் கோகா ஆட்டத்தில் மோதிய சென்னை குயிக் கன்ஸ்-தெலுங்கு யோத்தாஸ் அணியினர் (@ChnQuickGuns)

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஒடிஸா ஜக்கர்நட்ஸ் அணி, ராஜஸ்தான் வாரியர்ஸை எதிர்கொண்டது. அந்தப் பேட்டியில் 35-27 என்ற புள்ளிக் கணக்கில் ஒடிஸா வென்றது.

இரண்டாவது ஆட்டத்தில் தெலுங்கு யோத்தாஸ் 46-44 என்ற புள்ளிக் கணக்கில் மும்பை கிலாடிஸை தோற்கடித்தது.

நேற்று மூன்றாவது ஆட்டத்தில் ராஜஸ்தானும், குஜராத் ஜெயன்ட்ஸும் மோதின. இதில் 41-30 என்ற கணக்கில் குஜராத் ஜெயித்தது. 11 பாயிண்ட்கள் வித்தியாசத்தில் குஜராத் வென்றது.

மற்றொரு ஆட்டத்தில் அதாவது 4வது ஆட்டத்தில் சென்னை குயிக் கன்ஸ், தெலுங்கு யோத்தாஸ் மோதியது. இந்த ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் சென்னை குயிக் கன்ஸ் 38-32 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. 6 புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இன்று கட்டாக்கில் குஜராத் அணியும், மும்பை அணியும் 5வது ஆட்டத்தில் விளையாடவுள்ளது இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மற்றொரு ஆட்டத்தில் ஒடிஸா-சென்னை குயிக் கன்ஸ் அணி மோதுகிறது. இந்தப் போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

அல்டிமேட் கோ கோ, இந்தியாவின் முதல் தொழில்முறை Kho Kho லீக் ஆகும். அமித் பர்மன் அவர்களால் இந்திய Kho Kho Federation of India (KKFI) உடன் இணைந்து இந்த லீக் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விளையாட்டான கோ கோவை ஒரு தொழில்முறை கட்டமைப்பிற்குள் சந்தைப்படுத்துதல் மற்றும் தொகுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த லீக் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியானது இந்தியாவின் சொந்த உள்நாட்டு விளையாட்டை முன்னணிக்கு கொண்டு வருவதையும், இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டு லீக்காக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அல்டிமேட் கோ கோ லீக் பழமையான இந்திய விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், இளம் திறமையாளர்கள் தங்கள் திறமைகளை இந்தியா மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தவும் பாடுபடுகிறது.

கார்ப்பரேட் மற்றும் பொழுதுபோக்கு உலகின் மிகப் பெரிய பெயர்கள் சில உரிமையாளர்களின் ஆதரவுடன், அல்டிமேட் கோ கோவின் தொடக்க சீசனில் சென்னை குயிக் கன்ஸ் (KLO ஸ்போர்ட்ஸ்), குஜராத் ஜெயண்ட்ஸ் (அதானி ஸ்போர்ட்ஸ்லைன்), மும்பை கிலாடிஸ் (பாட்ஷா), புனித் பாலன் & ஜான்ஹவி தரிவால் பாலன்), ஒடிசா ஜக்கர்நாட்ஸ் (ஒடிசா விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஊக்குவிப்பு நிறுவனம்), ராஜஸ்தான் வாரியர்ஸ் (கேப்ரி குளோபல்) மற்றும் தெலுங்கு யோதாஸ் (ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ்) ஆகிய அணிகள் அல்டிமேட் கோ கோ பட்டத்திற்காக போராடுகின்றன. வீரர்கள் தங்கள் தலைசிறந்த ஆட்டத்தால் ரசிகர்களை கவரவும், தேசிய நட்சத்திரங்களாக மாறவும் இது வாழ்நாள் வாய்ப்பாக இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்