HBD Mariyappan Thangavelu: தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு பிறந்த தினம்!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Mariyappan Thangavelu: தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு பிறந்த தினம்!

HBD Mariyappan Thangavelu: தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு பிறந்த தினம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 28, 2023 05:45 AM IST

மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றதால் இவருக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 75 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கியது. அத்துடன் தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளது. இந்த நிலையில் தன்னை வளர்த்தெடுத்த அரசு பள்ளிக்கூடத்திற்கு 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மாரியப்பன் தங்கவேலு பிறந்த தினம்
மாரியப்பன் தங்கவேலு பிறந்த தினம்

தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரிய வடக்கம் பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. தந்தை கைவிட்ட நிலையில் தாய் சரோஜாவின் ஆதரவில் வளர்ந்தார்.

தன் 5 வயதில் பள்ளி செல்கையில் ஏற்பட்ட விபத்தில் வலது காலில் பேருந்து ஏறியதால் முழங்காலுக்கு கீழே காலின் செயல்பாட்டை இழந்தார்.

ஆனால் தன் கால் இயக்கம் குறை பட்டாலும் விளையாட்டின் மீது இருந்த ஆர்வம் மட்டும் மாரியப்பனுக்கு விடுவதாக இல்லை. ஆரம்பத்தில் ஓட்டப்போட்டியில் ஆர்வம் இருந்தாலும் தன் உடல் நிலை அதற்கு ஒத்துழைக்க வில்லை என்பதை உணர்ந்த மாரியப்பன் பின்னாட்களில் தன் உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரனின் தூண்டுதலால் உயரம் தாண்டுதல் போட்டியில் கவனம் செலுத்தினார்.

இவருக்கு 14 வயதில் முழு உடற்தகுதி கொண்டவர்களுடன் நடந்த போட்டி ஒன்றில் இரண்டாவதாக வந்தார்.

இதைதொர்ந்து 2013ம் ஆண்டு நடந்த தேசிய மாற்று திறனாளர்கள் போட்டியில் கலந்து கொண்ட மாரியப்பனை கண்ட சத்திய நாராயணா தனது பயிற்சி மாணவராக இணைத்து கொண்டார்.

இதையடுத்து 2015ல் பெங்களூருவில் உள்ள தன் பயிற்சி மையத்தில் சேர்த்துக்கொண்டார் சத்திய நாராயணா.

தங்கம் வென்ற மாரியப்பன்

இதையடுத்து 2016ல் துனிஷியாவில் நடந்த கிரண் பிரீ போட்டியில் 1.78 மீ தாண்டி இரியோ மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றார். இதில் தங்கம் வென்ற இவரை இந்தியாவே கொண்டாடியது. தமிழகம் தன் தங்கமகனை அரவணைத்தது.

துபாயில் கடந்த 2019ல் உலக பாரா தடகள சாம்பியன் ஷிப் போட்டிகளில் 1.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.

விருதுகள்

இவருக்கு இந்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் கேல் ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றதால் இவருக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 75 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கியது. அத்துடன் தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளது. இந்த நிலையில் தன்னை வளர்த்தெடுத்த அரசு பள்ளிக்கூடத்திற்கு 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில் மாரியப்பன் இன்று தனது 28வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் தன் வாழ்வில் மேலும பல வெற்றிகளை பெற இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.