T20 worldcup prize money: நியூசிலாந்தை விட இந்தியாவுக்கு கூடுதல் பரிசுத்தொகை
டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் தோற்ற இரு அணிகளில் நியூசிலாந்தை விட இந்தியாவுக்கு அதிக தொகை பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று டி20 உலகக் கோப்பை தொடர் இனிதே நிறைவுற்றது. இதையடுத்து எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. 2010ஆம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரை இரண்டு முறை வென்ற அணி என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் பகிர்ந்துள்ளது இங்கிலாந்து. இதையடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இங்கிலாந்து அணிக்கு கோப்பையுடன் பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் ரூ. 13.84 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இரண்டாவது இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ. 7.40 கோடி கிடைத்துள்ளது.
அரையிறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் தோல்வியை தழுவியது. இந்த அணிகளுக்கு பரிசுத்தொகையாக ரூ. 4.19 பரிசுத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா அணி சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்தை விட ஒரு போட்டி அதிகமாக வெற்றி பெற்றதால் கூடுதலாக பிரசுத்தொகை வழங்கப்பட்டது. அதன்படி இந்தியா ரூ. 4.50 கோடி பரிசை பெற்றுள்ளது.
இந்த பரிசுத்தொகையுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட இந்தியா, அடுத்த நியூசிலாந்தில் நடைபெற்று வரும் டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ளது.
முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ள நிலையில், முதல் போட்டியானது நவம்பர் 18ஆம் தேதி வெல்லிங்டனில் நடைபெறுகிறது.
டாபிக்ஸ்