T20 world cup 2022: ஐசிசி கனவு டி20 அணியில் மூன்று இந்திய வீரர்கள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  T20 World Cup 2022: ஐசிசி கனவு டி20 அணியில் மூன்று இந்திய வீரர்கள்

T20 world cup 2022: ஐசிசி கனவு டி20 அணியில் மூன்று இந்திய வீரர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 15, 2022 02:15 PM IST

டி20 உலகக் கோப்பை தொடர் முடிவுற்ற நிலையில், 16 அணிகள் விளையாடிய இத்தொடரிலிருந்து மொத்த 6 நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஐசிசி கனவு டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து மூன்று வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் கனவு அணி அறிவிப்பு
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் கனவு அணி அறிவிப்பு

இந்த தொடரில் பல்வேறு சுவாரஸ்யங்களும், அப்செட்களும் நிகழ்ந்துள்ளன. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான வெஸ்ட் இண்டீஸ் தொடரின் பிரதான சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இதைத்தொடர்ந்து முன்னணி அணிகளான ஆஸ்திரேலியா, தென்ஆப்பரிக்கா அணிகள் கடைசி நேரத்தில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் அதிர்ச்சி அளித்தன. அதேபோல் சாம்பியன் அணியான இலங்கையும் அரையிறுதி வாய்ப்பை நழுவவிட்டது.

இதையடுத்து இந்த தொடர் முழுக்க சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து ஐசிசி கனவு டி20 அணியை உருவாக்கியுள்ளது. அந்த அணியில் இங்கிலாந்து வீரர்கள் நான்கு பேர், இந்தியாவிலிருந்து மூன்று பேர், பாகில்தான் அணியில் இருந்து இருவர், தென்ஆப்பரிக்கா, ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளில் இருந்து ஒருவர் என தேர்வாகியுள்ளனர்.

ஐசிசி 2022ஆம் ஆண்டுக்கான கனவு டி20 அணியில் இடம்பெற்ற வீரர்களும், நடைபெற்ற முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அவர்கள் அடித்த ரன்கள், எடுத்த விக்கெட்டுகளின் விவரங்களை காணலாம்.

வீரரின் பெயர்அணிரன்கள்/விக்கெட்டுகள்
ஜோஸ் படலர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்)இங்கிலாந்து212 ரன்கள/ அவுட்டுகள்
அலெக்ஸ் ஹேல்ட்இங்கிலாந்து225 ரன்கள்
விராட் கோலிஇந்தியா296 ரன்கள்
சூர்யாகுமார் யாதவ்இந்தியா239 ரன்கள்
கிலென் பிலிப்ஸ்நியூசிலாந்து201 ரன்கள்
சிகந்தார் ராசாஜிம்பாப்வே210 ரன்கள்/ 10 விக்கெட்டுகள்
சதாப் கான்பாகிஸ்தான்98 ரன்கள்/ 11 விக்கெட்டுகள்
சாம் கரன்இங்கிலாந்து13 விக்கெட்டுகள்
அன்ரிச் நேர்ட்சேதென் ஆப்பரிக்கா11 விக்கெட்டுகள்
மார்க் வுட்இங்கிலாந்து9 விக்கெட்டுகள்
ஷாகீன் அப்ரிடிபாகிஸ்தான்11 விக்கெடுகள்
ஹர்திக் பாண்ட்யா  (12வது வீரர்)இந்தியா128 ரன்கள்/8 விக்கெட்டுகள்

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.