Wrestlers Protest: ‘WFI தலைவருக்கு எதிராக பாஜக அரசு கைது நடவடிக்கை எடுக்காது’-கபில் சிபல் விமர்சனம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wrestlers Protest: ‘Wfi தலைவருக்கு எதிராக பாஜக அரசு கைது நடவடிக்கை எடுக்காது’-கபில் சிபல் விமர்சனம்

Wrestlers Protest: ‘WFI தலைவருக்கு எதிராக பாஜக அரசு கைது நடவடிக்கை எடுக்காது’-கபில் சிபல் விமர்சனம்

Manigandan K T HT Tamil
Jun 05, 2023 12:24 PM IST

Kapil Sibal: 'மல்யுத்த வீரர்கள் குழுவை மத்திய அமைச்சர் அமித் ஷா சந்தித்தார். தீர்வை எட்டவே அந்தச் சந்திப்பு நடந்ததாக நான் கருதுகிறேன். ஆனால்..'

மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்
மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்

இந்தப் போராட்டத்திற்கு பெரும்பாலான விளையாட்டு வீரர்களும், வட இந்திய விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின்போது தடையை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்றதாக மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் தடுத்து நிறுத்தப்பட்ட காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல், மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

மல்யுத்த வீரர்கள் குழுவை மத்திய அமைச்சர் அமித் ஷா சந்தித்தார். தீர்வை எட்டவே அந்தச் சந்திப்பு நடந்ததாக நான் கருதுகிறேன். ஆனால், இதுவரை குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷணுக்கு எதிராக கைது நடவடிக்கை இல்லை. ஒருவேளை அது நடந்தால் அவருக்கு ஜாமின் கூட கிடைத்துவிடும். பின்னர், இது நீதிமன்ற விவகாரம் என கூறிவிடுவார்கள் என்று விமர்சித்துள்ளார் கபில் சிபல்.

டெல்லி காவல்துறை ஏப்ரல் 28 அன்று, கொன்னாட் பிளேஸ் காவல்நிலையத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக இரண்டு எஃப்ஐஆர்களை பதிவு செய்தது. இதில் ஒன்று, மல்யுத்த வீராங்கனையின் தந்தை பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் இச்சட்டம் வகை செய்யும்.

அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள சிங், தன் மீதான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் தூக்கு தண்டனையை கூட ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.