Shaili Singh: உலக தடகள சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை ஷைலி சிங்! டிரிபிள் ஐம்ப்பிலும் பதக்கம்
உலக தடகள சாம்பியன்ஷிப் மீட் நீளம் தாண்டுதலில் இந்திய இளம் வீராங்கனை ஷைலி சிங் வெள்ளி வென்றார். அதேபோல் டிரிபிள் ஜம்ப்பிலும் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.

ஸ்லோவாக்கியா நாட்டின் கோசிஸில் நடைபெற்ற உலக தடகள கான்டினென்டல் டூர் (வெண்கல நிலை) போட்டியில் இந்தியாவின் இளம் நீளம் தாண்டுதல் வீராங்கனை ஷைலி சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
20 வயதாகும் ஷைலி, ஐந்தாவது சுற்றில் வந்த 6.43 மீட்டர் தாண்டி, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பல்கேரியாவின் பிளமினா மிட்கோவா 6.70 மீட்டர் தூரம் பறந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.
டிரிபிள் ஜம்ப் போட்டியில் பதக்கம்
அதேபோல் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில், இந்தியாவின் எல்தோஸ் பால் வெண்கலம் வென்றார். இந்த போட்டியில் மற்றொரு இந்திய வீரரான பிரவீன் சித்திரவேல் பங்கேற்ற ஆறு பேரில் கடைசி இடத்தைப் பிடித்தார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற எல்டோஸ் 16.45 மீட்டர் தூரம் பறந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அதேபோல் பிரவீன் 15.87 மீட்டர் தூரம் எறிந்து ஆறாவது இடத்தைப் பிடித்தார்.
கியூபாவின் லாசரோ மார்டினெஸ் 16.88 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
ஜூன் 27 முதல் 30 வரை பஞ்ச்குலாவில் நடைபெறும் தேசிய மாநிலங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று இந்தியர்களும் பங்கேற்கவுள்ளார். இந்த போட்டி பாரிஸ் ஒலிம்பிக்கில் இவர்கள் தகுதி பெறுதற்கான போட்டியாக அமைகிறது.
ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
யு20 உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம்
கடந்த 2021இல் நடைபெற்ற யு20 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்று கவனத்தை ஈரத்தார், அப்போது 17 வயது நிரம்பியிருந்த இந்திய நீளம் தாண்டுதல் வீராங்கனையான சைஷி சிங். இதைத்தொடர்ந்து இந்தியாவின் சிறந்த நீளம் தாண்டும் வீராங்கனை என்ற பெயர் பெற்ற இவர், கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூருவில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 போட்டியில், 6.52 மீட்டர் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார்.
அதேபோல் இந்தியா ஓபன் ஜம்ப்ஸ் போட்டியில், 6.40 மீட்டர் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பாரிஸ் ஒலிம்பிக் தகுதி மதிப்பெண் 6.86 மீட்டர் என்றாலும், இதுவரை எந்த இந்தியப் பெண்ணும் இவ்வளவு தூரம் தாண்டியதில்லை.
இதையடுத்து சைஷியின் பயிற்சியாளரான அஞ்சு ஜார்ஜ், " ஷைலிக்கு தேவையானது சில சிறிய தொழில்நுட்ப சரிசெய்தல் தான். இந்த விஷயங்கள் தசை நினைவேற்ற நேரம் எடுக்கும். ஆனால் ஷைலியால் நிச்சயமாக எனது தேசிய சாதனையை முறியடிக்க முடியும்.
எனது சாதனையை முறியடிக்க அவருக்கு முழு ஆதரவை தந்து வருகிறேன். அவர் அதை ஒலிம்பிக்கில் செய்தால், அது ஒரு அற்புதமான கதையாக இருக்கும்" என்று கூறினார்.
ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆன்சி சோஜன், நயனா ஜேம்ஸ் ஆகியோரும் ஒலிம்பிக் தகுதிக்கான லிஸ்டில் இருப்பார்கள் என தெரிகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்