Serena Williams: இரண்டாவது குழந்தைக்கு தாயானார் செரீனா வில்லியம்ஸ்! கணவர் பகிர்ந்த புகைப்படம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Serena Williams: இரண்டாவது குழந்தைக்கு தாயானார் செரீனா வில்லியம்ஸ்! கணவர் பகிர்ந்த புகைப்படம்

Serena Williams: இரண்டாவது குழந்தைக்கு தாயானார் செரீனா வில்லியம்ஸ்! கணவர் பகிர்ந்த புகைப்படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 23, 2023 05:52 PM IST

அமெரிக்காவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் இரண்டாவது குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

கணவர் மற்றும் குழந்தைகளுடன் செரீன் வில்லியம்ஸ்
கணவர் மற்றும் குழந்தைகளுடன் செரீன் வில்லியம்ஸ்

ரெட்டிட் என்ற சமூக வலைத்தளத்தின் இணை தலைவர் அலெக்சிஸ் ஓஹானியன் என்பவரை கடந்த 2017இல் திருமணம் செய்து கொண்டார் செரீனா வில்லியம்ஸ். இதன் பின்னர் செரீனா - அலெக்சிஸ் தம்பதியினருக்கு அதே ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது.

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் கர்ப்பமான செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது குழந்தைக்கு தாயாகியுள்ளார். அவருக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. செரீனாவுக்கு குழந்தை பிறந்து இருப்பதை அவரது கணவர் அலெக்சிஸ் இன்ஸ்டாவில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் செரீனா தனது இரண்டாவது குழந்தை, முதல் குழந்தை, கணவர் ஆகியோருடன் இருக்கும் குடும்ப புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். செரீனா - அலெக்சிஸ் தம்பதியினர் தங்களது முதல் குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா ஒஹானியன் ஜூனியர் என பெயர் வைத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து இரண்டாவது குழந்தைக்கு ஆதிரா ரிவர் ஒஹானியன் என பெயர் வைத்துள்ளனர்.

தனது டென்னிஸ் கேரியரில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீராங்கனையாக இருந்து வரும் செரீனா கடந்த மே மாதம் நிகழ்ச்சி ஒன்றில் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர், அதற்கு முன்னர் ஆகஸ்ட் மாதமே டென்னிஸ் விளையாட்டில் முடித்து கொள்ளப்போவதாக பேசியிருந்தார். குடும்ப வாழ்க்கைய தொடர விரும்புவதால் டென்னிஸ் விளையாட்டுக்கு முழுக்கு போட இருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இரண்டாவது குழந்தைக்கு தாயாகியுள்ள செரீனாவுக்கு குடும்ப பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.