HBD Serena Williams: டென்னிஸ் வீராங்கனை மட்டுமல்ல சிறந்த தொழில் முனைவோருமான செரீனாவின் பிறந்த நாள் இன்று
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Serena Williams: டென்னிஸ் வீராங்கனை மட்டுமல்ல சிறந்த தொழில் முனைவோருமான செரீனாவின் பிறந்த நாள் இன்று

HBD Serena Williams: டென்னிஸ் வீராங்கனை மட்டுமல்ல சிறந்த தொழில் முனைவோருமான செரீனாவின் பிறந்த நாள் இன்று

Manigandan K T HT Tamil
Sep 26, 2023 06:20 AM IST

Tennis: பேஷன் மட்டுமில்லைங்க, நகை வடிவமைப்பிலும் இவருக்கு அதிக ஆர்வம். அதன் காரணமாக ஜூவல்லரியும் தொடங்கினார்.

செரீனா வில்லியம்ஸ்
செரீனா வில்லியம்ஸ்

மகளிர் டென்னிஸ் சங்கத்தால் தொடர்ந்து 186 வாரங்கள் உட்பட 319 வாரங்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். மேலும் ஐந்து முறை ஆண்டின் இறுதியில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். அவர் 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றார். ஓபன் போட்டியில் அதிக பட்டங்களை வென்றவர் ஆவார். ஒற்றையர் மற்றும் இரட்டையர் இரண்டிலும் தொழில்முறை கோல்டன் ஸ்லாம் வென்ற ஒரே வீராங்கனை இவர்தான்.

செரீனா வில்லியம்ஸ் தனது மூத்த சகோதரி வீனஸுடன் சேர்ந்து பெற்றோரிடம் இருந்து டென்னிஸை கற்றுத் தேர்ந்தார். 1995 ஆம் ஆண்டில் தொழில்முறை வீராங்கனையாக மாறிய அவர், 1999 அமெரிக்க ஓபனில் தனது முதல் ஒற்றையர் பட்டத்தை வென்றார். 2002 பிரெஞ்சு ஓபன் முதல் 2003 ஆஸ்திரேலிய ஓபன் வரை, அவர் ஆதிக்கம் செலுத்தினார். நான்கு முக்கிய ஒற்றையர் பட்டங்களையும் வென்றார்.

வில்லியம்ஸ் தனது சகோதரி வீனஸுடன் இணைந்து 14 முக்கிய மகளிர் இரட்டையர் பட்டங்களையும் வென்றார். மேலும் இந்த ஜோடி முக்கிய இரட்டையர் இறுதிப் போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்தது சாதனையாகக் கருதப்படுகிறது.

பல தருணங்களில் காயம் அடைந்து மீண்டு வந்திருக்கிறார்.

செரீனாவின் வாழ்நாள் முழுவதும் பேஷனில் இருந்த ஆர்வம் அவரை பேஷன் ஸ்கூலுக்கு இட்டுச் சென்றது, டென்னிஸுடன் பேஷன் குறித்தும் கற்றுக் கொண்டிருந்தார். 2018 ஆம் ஆண்டில், அவர் தனது சொந்த ஆடை நிறுவனமான எஸ் பை செரீனாவைத் தொடங்கினார். பேஷனுக்கு இந்த நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

பேஷன் மட்டுமில்லைங்க, நகை வடிவமைப்பிலும் இவருக்கு அதிக ஆர்வம். அதன் காரணமாக ஜூவல்லரியும் தொடங்கினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.