HBD Janko Tipsarevic: டாப் சீட் டென்னிஸ் வீரர்களை அதிர்ச்சி தோல்வியடை செய்த வீரர் - செர்பியா டேவிஸ் கோப்பை அணி நாயகன்
ஆறு வயதில் இருந்தே டென்னிஸ் விளையாடி வரும் செர்பியா நாட்டின் டாப் டென்னிஸ் வீரராகவும், ஏடிபி உலக் டூர், ஆஸ்திரேலியா ஓபன் உள்பட பல்வேறு டைட்டில்களையும் வென்றவர் ஜான்கோ டிப்சரேவிக்ய டாப் ரேங்கிங் வீரர்களான ஜோக்கோவிக், ஆண்டி முர்ரோ உள்பட பலரை வீழ்த்தி டென்னிஸ் உலகை திரும்பி பார்க்கவும் வைத்துள்ளார்.
செர்பியா தலைநகர் பெல்கிரேடில் பிறந்த ஜான்கோ டிப்சரேவிக் தனது ஆறு வயதில் இருந்தே டென்னிஸ் விளையாட்டை ஆர்வமாக விளையாடி வந்துள்ளார். தனது 9வது வயதில் நியூ பெல்கிரேட் டென்னிஸ் கிளப்பில் விளையாடியுள்ளார்.
1984இல் பிறந்த ஜான்கோ டிப்சரேவிக், 2001 ஜூனியர் ஆஸ்திரேலியா ஓபன் கோப்பையை தட்டினார். 2001 முதல் 2004 காலகட்டத்தில் யுகோஸ்லவ் டேவிஸ் கோப்பை, ஏடிபி சேலஞ்சர் போன்ற தொடர்களில் பங்கேற்றார். இந்த காலகட்டத்தில்தான் யுஎஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பங்கேற்றார்.
2005-06 காலகட்டத்தில் டாப் 100 வீரர்களில் ஒருவராக முன்னேறினார் ஜான்கோ. பின்னர் 2007-08 சீசனில் டாப் 50 வீரர்கள் இடத்துக்கு முன்னேறிய ஜான்கோ, 2008 ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் டாப் வீரரான ரோஜர் பெடரருக்கு எதிராக போராடி தோல்வியை தழுவினர். அவரை 5 செட்கள் வரை விளையாட வைத்தே பின்னர் தோல்வியுற்றார். இதனால் உலகம் கவனிக்கும் வீரராக உருவெடுத்தார்.
படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வந்த ஜான்கோ 2010இல் டேவிஸ் கோப்பையை வென்றார். இதையடுத்து 2011இல் முதல் ஏடிபி டை்டடிலை வென்றதுடன், டாப் 10 வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். 2014 வரை நான்கு ஏடிபி டைட்டில்களை வென்ற ஜான்கோ, ஏர்செல் சென்னை ஓபன் தொடரையும் வென்று டென்னிஸ் உலகில் டாப் வீரராக உயர்ந்தார்.
இதே ஆண்டில் குதிகாலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர் மீண்டும் 17 மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் டென்னிஸ் விளையாட்டில் பங்கேற்றார். காயத்துக்கு பின்னர் பழைய பார்மை அவரை மீட்டெடுக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் ரேங்கிங்கிலும் பின் தங்கினார். கடைசியாக 2018இல் யுஎஸ் ஓபன், 2019இல் ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் பங்கேற்ற பின்னர் ஓயவை அறிவித்தார்.
செர்பியா டேவிஸ் கோப்பை அணியில் 2000 முதல் 2013 வரை தொடர்ச்சியாக விளையாடி இவர் கடைசியாக 2016இல் பங்கேற்றார். ஏடிபிி தொடரில் 4 முறையும், செர்பியா அணிக்காக 3 முறையும், ஜூனியர் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவரும், டாப் சீட் வீரர்களுக்கு சரியான சவால் தரும் வீரராகவும் இருந்து வந்த ஜான்கோ டிப்சரேவிக் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்