HBD Sakshi Malik: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற மங்கை - காமென்வெல்த் விளையாட்டில் பதக்கம் அள்ளியவர்
இந்தியாவுக்காக ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீராங்கனையும், இளம் வயதில் பத்மஸ்ரீ, தயான் சந்த் கேல் ரத்னா விருதையும் வென்ற வீராங்கனையாக இருப்பவர் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.
ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த விளையாட்டில் இந்தியாவுக்காக முதல் முறையாக பதக்கம் வென்ற வீராங்கனை என பெருமையை பெற்றவர் சாக்ஷி மாலிக். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளம் வீராங்கனையான இவர் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். அதே போல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற வீராங்கனையாகவும், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று வெண்கலம், ஒரு வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெண்கலம் வென்றுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் மோக்ரா என்ற கிராமத்தில் பிறந்த சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரரும் தனது தாத்தாவுமான பத்லூ ராம் என்பவரால் ஈரக்கப்பட்டு மல்யுத்த விளையாட்டில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். தனது 12 வயதில் இருந்து மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டு வரும் சாக்ஷி மாலிக், 2010ஆம் ஆண்டில் முதல் முறையாக சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கப்ட்டார். ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 58 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்று சாதித்தார். இதன் பின்னர் 2014இல் டேவ் ஷூல்ட்ஸ் சர்வதேச தொடரில் 60 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.
இதையடுத்து முதல் முறையாக கிளாஸ்கோவில் நடைபெற்ற 2014 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 58 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார். இதன்பின்னர் 2015ஆம் ஆண்டில் தோகாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார்.
2016 ரியோ ஓலிம்பிக்கில் கிர்கிஸ்தான் நாட்டை சேர்ந்த வீராங்கனையை வீழ்த்தி வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தியாவுக்காக பதக்கம் வென்று முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதைத்தொடர்ந்து 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார்.
சமீபத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சிங் நடத்திய எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்களால் நடப்பட்ட போராட்டத்தில் இந்திய மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், பாபிதா குமார், கீதா போகத் ஆகியோருடன் சாக்ஷி மாலிக்கும் ஈடுபட்டார்.
இளம் வீராங்கனையாக சர்வதேச அளவில் ஜொலித்த சாக்ஷி மாலிக், 2016இல் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா, 2017இல் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இளம் நட்சத்திர வீராங்கனையாக இந்தியாவுக்கு பல்வேறு பதக்கங்களை பெற்று தந்திருக்கும் சாக்ஷி மாலிக் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
டாபிக்ஸ்