Rohit Sharma injured in practice: லேசான காயம்!பயிற்சியில் ப்ரேக் எடுத்த ரோஹித்
த்ரோ ஸ்பெஷலிஸ்ட் வீசிய பந்து முழங்கையில் தாக்கியதால் உடனடியாக பயிற்சியை நிறுத்திவிட்டு முதலுதவி பெற்றார் ரோஹித். காயம் ஏற்படும் அபாயம் இருப்பதால் பயிற்சியை தொடராமல் வெளியேறினார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் முடிவுற்று அரையிறுதி போட்டிகள் நாளை நடைபெறவுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள. முதல் அரையிறுதி ஆட்டம் நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையே சிட்னியில் நாளை நடைபெறகிறது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா - இங்கிலாந்து இடையே வரும் 10ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கிடையே இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பயிற்சியின்போது த்ரோ ஸ்பெஷலிஸ்ட் வீசிய பந்தை எதிர்கொண்ட இந்திய பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா காயமடைந்தார். அவர் வீசிய பந்து ரோஹித்தின் வலது முழங்கையை தாக்கிய நிலையில், வலியில் துடித்த அவர் உடனடியாக முதலுதவி எடுத்துக்கொண்டார்.
இதன்பின்னர் வலியுடன் மீண்டும் ஒரு பந்தை எதிர்கொண்ட அவர், பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளாமல் வெளியேறினார்.
இந்திய அணியின் மற்ற வீரர்கள் பயிற்சியை தொடர்ந்த நிலையில், காயமடைந்த இடத்தில் ஐஸ் பாக்ஸை வைத்து ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தார் ரோஹித் ஷர்மா.
இந்தியா வீரர்கள் மனநல பயிற்சியாளர் பேடி ஆப்டனுக்கு ரோஹித்திடம் காயத்தின் தன்மை குறித்து கேட்டறிந்துள்ளார். காயத்துக்கு அபாயம் இருக்க வாய்ப்பு உள்ளதால் ரோஹித் பயிற்சியை தொடரவில்லை என தெரிகிறது.
சில மணி நேரம் ஓய்வுக்கு பிறகு ரோஹித் மீண்டும் பயிற்சியை தொடர்ந்துள்ளார். காயத்தின் தன்மை குறித்து அவர் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பங்கேற்பாரா என முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
ரோஹித் இடம்பெறாதபட்சத்தில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார். தொடக்க பேட்ஸ்மேன்களாக ரிஷப் பண்ட், தீபக் ஹூடோ ஆகியோரில் யாருக்காவது வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
டாபிக்ஸ்