தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rohan Bopanna: ஏடிபி பைனல்ஸ் 2023 போட்டியில் வெற்றி - 43 வயதில் சாதனை புரிந்த ரோஹன் போபன்னா

Rohan Bopanna: ஏடிபி பைனல்ஸ் 2023 போட்டியில் வெற்றி - 43 வயதில் சாதனை புரிந்த ரோஹன் போபன்னா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 16, 2023 05:59 PM IST

43 வயதாகும் ரோஹன் போபன்னா, தென் ஆப்பரிக்காவின் மேத்யூ எப்டனுடன் இணைந்து ஏடிபி ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஏடிபி போட்டிகளில் மிக அதிக வயதில் வென்ற டென்னிஸ் வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

ஏடிபி பைன்ஸ் 2023 போட்டியில் இந்திய வீரர் ரோஹன் போபன்னா - தென் ஆப்பரிக்கா வீரர் மேத்யூ எப்டன்
ஏடிபி பைன்ஸ் 2023 போட்டியில் இந்திய வீரர் ரோஹன் போபன்னா - தென் ஆப்பரிக்கா வீரர் மேத்யூ எப்டன் (AFP)

இத்தாலியுள்ள டுரின் நகரில் நடைபெற்அற ஏடிபி 2023 இறுதிப்போட்டியில் வரலாறு படைத்துள்ளார் இந்திய வீரரான ரோஹன் போபன்னா. இரண்டாவது குரூப் பிரிவு ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில், தென் ஆப்பரிக்காவின் மேத்யூ எப்டனுடன் இணைந்து, ஆஸ்திரேலியா வீரர்களான ரிங்கி ஹிஜிஜாதா, ஜாசின் குப்ளர் ஆகியோரை அவர் வீழ்த்தியுள்ளார்.

இதன மூலம் ஏடிபி பைனல்ஸ் போட்டியில் அதிக வயதில் வெற்றி பெற்ற கனடா வீரர் டேனியல் நெஸ்டார் சாதனையை போபன்னை வீழ்த்தியுள்ளார். கடந்த 2014இல் நெஸ்டார் தனது 42வது வயதில் வெற்றி பெற்ற நிலையில், இந்தியாவின் போபன்னா தனது 43வது வயதில் வெற்றி பெற்றுள்ளார்.

சமீபத்தில், சீனாவிலுள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு 2023 தொடரில் கலவை இரட்டையர் பிரிவு போட்டியில் ருதுஜா போன்சலேவுடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்றார். இதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு சாதனை வெற்றி பெற்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ட்ரெண்டிங் செய்திகள்

Google News: https://bit.ly/3onGqm9