US Open 2023: காலிறுதிக்கு தகுதி பெற்ற போப்பண்ணா - மேத்யூ எப்டன் ஜோடி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோஹன் போப்பண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி காலிறுதி சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு மூன்றாவது சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி- அமெரிக்காவின் ஜூலியன் கேஷ், ஹென்றி பேட்டன் ஜோடியுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் போபண்ணா ஜோடி 6-4, 6-7 (5-7), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நட்சத்திர டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், குரோஷியாவின் போர்னா கோஜோவை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 7-5, 6- 4 என்ற செட் கணக்கில் வென்றார். இதன் மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டிகள் கிராண்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக உள்ளது. தற்போது நடைபெற்று வரும் தொடரில் இந்தியாவிலிருந்து போப்பண்ணா மட்டும் பங்கேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்