Rohan Bopanna: டென்னிலிஸ் விளையாட்டிலேயே தனித்துவ சாதனை புரிந்த இந்திய வீரர் போப்பண்ணா
டென்னிஸ் விளையாட்டு வரலாற்றில் அதிக வயதில் அரையிறுதிக்கு நுழைந்த வீரர் என்ற வரலாறு படைத்துள்ளார் 43 வயதாகும் இந்திய வீரர் ரோஹன் போப்பண்ணா.
ஆஸ்திரேலியா ஓபன் 2024 டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ எப்டனுடன் இணைந்து விளையாடி வருகிறார் இந்திய வீரரான ரோஹன் போப்பண்ணா.
இந்த ஜோடி, அர்ஜெண்டினாவின் மேக்சிமோ கோன்சாலே, ஆன்ரெஸ் மோல்டெனி ஜோடியை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் மிக அதிக வயதில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற வீரர் என்ற சாதனை புரிந்துள்ளார் போப்பண்ணா.
தனது 43வது வயதில் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரர் என்ற பெருமையை பெற்றதுடன், டென்னிஸ் விளையாட்டிலேயே அதிக வயதில் நம்பர் 1 இடத்தை பிடித்த வீரர் என்ற வரலாறும் படைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதிக்கு தகுதி பெற்ற வயதான வீரர் என்ற பெருமை பெற்றார் போப்பண்ணா. யுஎஸ் ஓபன் 2023 தொடரில் இந்த பெருமை பெற்ற போப்பண்ணா அந்த தொடரின் இறுதியில் தனது பார்ட்னர் எப்டனுடன் களமிறங்கி தோல்வியை தழுவினார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக போப்பண்ணா டென்னிஸ் விளையாட்டு விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் களமிறங்கியபோதே தனது டென்னிஸ் கேரியரில் உச்சபட்ச ரேங்கான உலகின் டாப் இரட்டையர் வீரர்களில் 3வது இடத்தை பிடித்திருந்தார். இதையடுத்து தற்போது காலிறுதி போட்டியில் அர்ஜென்டினா வீரர்களை வீழ்த்தியதன் மூலம் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் இதற்கு முன்னர் 17 முறை அரையிறுதிக்கான முயற்சிக்கு பின் போப்பண்ணா தற்போது முன்னேறியுள்ளார். அர்ஜென்டினா ஜோடிக்கு எதிரான காலிறுதி போட்டியில் 6-4, 7-6 (5) என்ற நேர் செட்களில் போப்பண்ணா ஜோடி எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டி ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் வரை நீடித்தது.
இரண்டாம் சீட் வீரர்களாக இருந்து வரும் போப்பண்ணா - எப்டன் ஜோடி அரையிறுதி போட்டியில் சீட் ரேங்க் பெறாத தாமஸ் மச்சாக் மற்றும் ஜிசென் ஜாங் ஆகியோர் எதிர்கொள்கிறார்கள்
2017இல் பிரான்ஸ் ஓபன், கலவை இரட்டையர் பிரிவு போட்டியில் ரோஹன் போப்பண்ணா பட்டம் வென்றார். ஆனாலும் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஒரு பட்டம் கூட கிடைக்காமல் இருந்தது.
2010ல் பாகிஸ்தானின் ஐசம்-உல்-ஹக் குரேஷுடனும், 2023ல் எப்டனுடனும் அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரில் இரண்டு முறை இரண்டாம் இடத்தை பிடித்தார்.
கடந்த ஆண்டில் மிகவும் மதிப்புமிக்க இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றார் போப்பண்ணா.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்