Rafael Nadal is back: ‘நாயகன் மீண்டும் வரார்’-காயத்திலிருந்து மீண்டு வருகிறார் ரஃபேல் நடால்
நடால் கடைசியாக ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடினார், இரண்டாவது சுற்றில் அமெரிக்கரான மெக்கென்சி மெக்டொனால்டிடம் தோற்றார்.
காயம் காரணமாக சுமார் ஓராண்டு டென்னிஸ் விளையாடாமல் இருந்து வந்த ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், அடுத்த மாதம் மீண்டும் டென்னிஸ் விளையாட திரும்புகிறார்.
22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நடால், காயத்துடன் போராடிய பின்னர் இந்த ஆண்டு இரண்டு முறை அறுவை சிகிச்சைக்கு செய்து கொண்டார். அவர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன் தனது கடைசி சீசனில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜனவரி 1-7 முதல் பிரிஸ்பேனில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் வார்ம்-அப் நிகழ்வில் அவர் மீண்டும் வருவார் என்று கடந்த வாரம் அறிவித்தார்.
"எப்படி விளையாடுவேன் என்று எனக்குத் தெரியவில்லை, என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் இப்போது எதைப் பற்றியும் கவலைப்படவில்லை" என்று நடால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் கூறினார். "நான் மீண்டு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் கோதாவில் குதிப்பதற்கான முயற்சியை மிகுந்த உற்சாகத்துடன் செய்கிறேன், மேலும் நான் போட்டியிடுவேன் என்று நம்புகிறேன்." என்றார்.
நடால் கடைசியாக ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடினார், இரண்டாவது சுற்றில் அமெரிக்கரான மெக்கென்சி மெக்டொனால்டிடம் தோற்றார்.
அவர் முதலில் பிரெஞ்ச் மற்றும் விம்பிள்டன் போட்டிக்கு வருவார் என்று நம்பினார்,
37 வயதான ஸ்பெயின் வீரர் ஓரங்கட்டப்பட்ட நிலையில் உலக தரவரிசையில் 664வது இடத்திற்கு சரிந்துள்ளார். நடால் 2009 மற்றும் 2022ல் இரண்டு முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனானார்.
"இறுதியாக நான் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை பெற்றேன். மேலும், நான் கடந்த காலத்தில் விளையாடிய, எனக்கு நன்கு தெரிந்த ஒரு போட்டியான ஆஸ்திரேலியன் ஓபனில் மீண்டும் வருகிறேன்.
இது ஒரு கடினமான போட்டி என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் போட்டியிடத் தயாராக இருக்க விரும்புகிறேன், நான் போட்டியிடுவதைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை" என்றார் நடால்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்