Arm Wrestling: புரோ பஞ்சா லீக் சீசன் 1 இன்று முதல் தொடக்கம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Arm Wrestling: புரோ பஞ்சா லீக் சீசன் 1 இன்று முதல் தொடக்கம்

Arm Wrestling: புரோ பஞ்சா லீக் சீசன் 1 இன்று முதல் தொடக்கம்

Manigandan K T HT Tamil
Jul 28, 2023 03:06 PM IST

Pro Panja League season 1: புரோ பஞ்சா லீக் என்பது கை மல்யுத்த (Arm Wrestling) போட்டி ஆகும்.

கை மல்யுத்த போட்டியில் வீரர்கள் (file photo) (PTI Photo/Atul Yadav)(PTI06_06_2023_000150A)
கை மல்யுத்த போட்டியில் வீரர்கள் (file photo) (PTI Photo/Atul Yadav)(PTI06_06_2023_000150A) (PTI)

இன்று மாலை 5 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

புரோ பஞ்சா லீக்கின் பரபரப்பான தொடக்க சீசனுக்கு களம் தயாராகி வருவதால் இந்தியா முழுவதும் உள்ள ஆர்ம் மல்யுத்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 13 வரை டெல்லியில் உள்ள ஐ.ஜி.ஐ மைதானத்தில் நடத்தப்படும் புரோ பஞ்சா லீக் ஏற்கனவே அதன் தனித்துவமான வடிவத்தால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடக்க நாளில் சிறப்பு விருந்தினராக இந்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொள்கிறார். பஞ்சா மேஜையையும் அவர் திறந்து வைக்கிறார்.

ஆண்கள், பெண்கள், உடல் ஊனமுற்றோர் என, 10 எடை பிரிவுகளில், தலா, 30 வீரர்கள் கொண்ட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இதில் மும்பை இந்தியன்ஸ், கிராக் ஹைதராபாத், ரோத்தக் ரவுடிஸ், லூதியானா லயன்ஸ், பரோடா பாட்ஷாஸ், கொச்சி கேடி ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

தொடக்க விழாவுக்கு முன்னதாக, புரோ பஞ்சா லீக் இணை நிறுவனர் பர்வின் தபாஸ் கூறுகையில், "புரோ பஞ்சா லீக்கின் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தொடக்க நாளை நெருங்கும்போது நான் உற்சாகமாக இருக்கிறேன். இந்த லீக் உலக அளவில் கை மல்யுத்த விளையாட்டை மறுவரையறை செய்யும்.

முதலிடத்தைப் பிடிக்கும் நோக்கில் வீரர்கள் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு வியர்வை சிந்தி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, வீரர்களைப் போலவே ரசிகர்களும் ஆட்டத்தை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.