Wrestling Selection Trials: ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி சுற்றில் ரவி தாஹியா தோல்வி
2015 ஆம் ஆண்டில் சால்வடோர் டி பாஹியாவில் நடந்த ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 55 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவி தாஹியா ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு செல்வதற்கான தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.
ஒலிம்பிக் மற்றும் உலக பதக்கம் வென்ற ரவி தாஹியா, இந்த போட்டிக்கான மல்யுத்த தேர்வு சோதனைகளின் முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.
டெல்லியில் இன்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆதிஷ் தோட்கரை அவர் எதிர்கொண்டார். போட்டி முடிவில் 20-8 என்ற புள்ளிக் கணக்கில் ஆதிஷ் ஜெயித்தார்.
ரவி தாஹியா இளம் வயது முதலே மல்யுத்தத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2015 ஆம் ஆண்டில் சால்வடோர் டி பாஹியாவில் நடந்த ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 55 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக அவர் விளையாடாமல் இருந்தார். 2018-ம் ஆண்டு புகாரெஸ்டில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2019 புரோ மல்யுத்த லீக்கில் பட்டம் வென்ற ஹரியானா ஹாமர்ஸ் அணியில் தாஹியா முக்கிய பங்காற்றினார்.
2019-ம் ஆண்டு சியானில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்க போட்டியில் தோல்வியடைந்து 5-வது இடத்தைப் பிடித்தார்.
2019 ஆம் ஆண்டில் தனது உலக சாம்பியன்ஷிப் அறிமுக போட்டியில், தாஹியா 16 வது சுற்றில் ஐரோப்பிய சாம்பியன் அர்சென் ஹருத்யுன்யனையும், காலிறுதியில் 2017 உலக சாம்பியனான யூகி தகாஹாஷியையும் தோற்கடித்து, 2020 கோடைகால ஒலிம்பிக்கிற்கு கிடைக்கக்கூடிய ஆறு ஒதுக்கீட்டு இடங்களில் ஒன்றைப் பெற்றார்.
அரையிறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனும் இறுதியில் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜாவுர் உகுவேவிடம் தோற்றார்.
ஈரானின் ரெசா அத்ரியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். 2019 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றவர் மற்றும் மூன்று முறை ஆசிய சாம்பியன் ஆவார்.
2020-ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2021-ம் ஆண்டு அல்மாட்டியில் நடந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றார்.
2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
2022 யாசர் டோகு போட்டியில், இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் குலோம்ஜோன் அப்துல்லாவை 11-10 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். 2022 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உஸ்பெகிஸ்தானின் குலோம்ஜோன் அப்துல்லாவிடம் தோற்றார்.
டாபிக்ஸ்