Novak Djokovic: பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ஜோகோவிச் 3-வது முறையாக சாம்பியன்-நடாலின் சாதனை முறியடிப்பு!
French Open Tennis: பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் வெற்றி பெற்றதன் மூலம், ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் செர்பியா வீரர் ஜோகோவிச்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது கடினமாக களிமண் தரையில் விளையாடப்படும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் பெறும் 3வது பட்டம் ஆகும்.
ஒட்டுமொத்தமாக கிரண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட தொடரில் அவர் வென்ற 23 வது பட்டம் ஆகும். இதன்மூலம், அவர் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலின் சாதனையை முறியடித்தார். நடாலும், ஜோக்கோவிச்சும் 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தனர். களிமண் தளத்தில் ராஜா என வர்ணிக்கப்படும் நடால் இம்முறை காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.
அதேநேரம், உலகின் பல முன்னணி வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் பைனல் போட்டி நடந்தது. இப்போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட்-செர்பியா வீரர் ஜோக்கோவிச் ஆகியோர் மோதினர்.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 7-6 (7/1), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்றார் ஜோக்கோவிச். விடாமல் மல்லுக்கட்டிய கேஸ்பர் ரூட், கடைசியில் தோற்றார்.
இதன்மூலம், மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார் ஜோக்கோவிச். அதாவது, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் போட்டிகளாக ஆஸி., ஓபன், யு.எஸ். ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன் ஆகிய போட்டிகளில் 3 முறை மற்றும் அதற்கு மேல் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
சாம்பியன் பட்டத்துக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ஜோக்கோவிச். சாதனை புரிந்த அவருக்கு டென்னிஸ் உலகின் முன்னணி நட்சத்திரங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்