பாகிஸ்தானை பந்தாடிட்டு இங்கே வந்து ‘ஒயிட் வாஷ்’ ஆகிட்டியே முருகேசா!
New Zealand Team: 2-1 என பாகிஸ்தான் தொடரை வென்ற முழு உற்சாகத்தில் இந்திய தொடரையும் கைப்பற்ற வந்த நியூசிலாந்து அணியை, ‘ஒயிட் வாஷ்’ செய்திருக்கிறது இந்திய அணி.
ஒரு நாள் போட்டிக்கான நம்பர் 1 அணி நியூசிலாந்து. இது, இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு. இப்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் அணி நியூசிலாந்து. அதற்கு காரணம், இந்திய அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்ததும், தொடரை இழந்ததும் தான் காரணம்.
நியூசிலாந்து அணி அவ்வளவு பலவீனமான அணியா?என்று நமக்குள் எண்ணம் வரலாம். இல்லை இல்லை… நியூசிலாந்து அசுர பலம் கொண்ட அணி தான்; ஆனால், அதை விட பலமான அணி இந்திய கிரிக்கெ அணி என்பது தான் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சுற்றுப்பயணத்திற்கு முன் பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டது நியூசிலாந்து அணி. பாகிஸ்தான் பயணத்தில் அந்நாட்டு அணியை அடித்து துவம்சம் செய்துவிட்டு தான், இந்தியா வந்து இறங்கியது. அங்கு நடந்த 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து செய்த சம்பவத்தை பார்க்கலாம்.
முதல் ஒரு நாள் போட்டி:
ஜனவரி 9ம் தேதி நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்தது. இரண்டாவது பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்தாலும், இலக்கை எட்ட போராடியது. ஒரு வழியாக 48.1 ஓவரில் இலக்கை எட்டிய பாகிஸ்தான், போராடி நியூசிலாந்தை தோற்கடித்தது.
இரண்டாவது ஒரு நாள் போட்டி:
ஜனவரி 11 ம் தேதி நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில், முதல் போட்டிக்கு பழிதீர்க்கும் விதமாக பதம் பார்த்தது நியூசிலாந்து. 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி, 261 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மூன்றாவது ஒரு நாள் போட்டி:
ஜனவரி 13ம் தேதி நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்தின் ஆதிக்கம் தொடர்ந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 50 ஓவரில் 280 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 48.1 ஓவரில் 281 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்படி, 2-1 என பாகிஸ்தான் தொடரை வென்ற முழு உற்சாகத்தில் இந்திய தொடரையும் கைப்பற்ற வந்த நியூசிலாந்து அணியை, ‘ஒயிட் வாஷ்’ செய்திருக்கிறது இந்திய அணி. ‘நான் எப்போ பாய்வேன், எப்போ பதுங்குவேன்’ என்பது எனக்கு மட்டும் தான் தெரியும் என்பது போல , நியூசிலாந்து அணியை ஒரே அடியாக காலி செய்து, அந்த அணி இருந்த முதலாவது இடத்தில் கம்பீரமாக ஏறி அமர்ந்திருக்கிறது இந்திய அணி. புள்ளிகளும், இடங்களும் நிலையானது இல்லை தான். ஆனாலும், ஒவ்வொரு முறை அதை எட்டும் போது, அதை பெற எந்த மாதிரியான வெற்றியை பெறுகிறோம் என்பது முக்கியமல்லவா? அப்படி தான் இந்த முறை கெத்து காட்டுகிறது இந்திய அணி!
டாபிக்ஸ்