தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ms Dhoni: மும்பை வான்கடே மைதானத்தில் ‘Mr. Cool Captain’ தோனிக்கு விரைவில் சிலை!

MS Dhoni: மும்பை வான்கடே மைதானத்தில் ‘Mr. Cool Captain’ தோனிக்கு விரைவில் சிலை!

Manigandan K T HT Tamil
Apr 04, 2023 12:07 PM IST

Mahendra Singh Dhoni: 2011 உலகக் கோப்பை பைனலில், அப்போது கேப்டனாக இந்திய அணியை வழிநடத்திய தோனி அடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க வின்னிங் ஷாட் சிக்ஸரை நினைவுகூறும் வகையில் அவருக்கு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2011 உலகக் கோப்பையில் வின்னிங் ஷாட் அடித்த தோனி
2011 உலகக் கோப்பையில் வின்னிங் ஷாட் அடித்த தோனி

ட்ரெண்டிங் செய்திகள்

2011 உலகக் கோப்பை பைனலில், அப்போது கேப்டனாக இந்திய அணியை வழிநடத்திய தோனி அடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க வின்னிங் ஷாட் சிக்ஸரை நினைவுகூறும் வகையில் அவருக்கு சிலை அமைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த சிலையை தோனி கையாலேயே திறக்க அவரிடம் விரைவில் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, மகாராஷ்டிர மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கும் முழு உருவச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

அக்டோபர்-நவம்பரில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையின் போது திறக்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவுக்காக தனது இறுதி ஆட்டத்தில் விளையாடிய மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் அவரது முழு உருவச் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறி இருந்தனர்.

வான்கடே ஸ்டேடியத்தில் அமைக்கப்படும் முதல் முழு உருவச் சிலை இதுதான். இதை எங்கே அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கேல் கூறியிருந்தார்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு 2 முறை (50 ஓவர், டி20 கிரிக்கெட்) உலகக் கோப்பையை வென்றுத் தந்த தோனிக்கும் சிலை அமைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோனி
தோனி (PTI)

தோனி தலைமையில், இந்தியா 2007 ஐசிசி டி20 உலகக்கோப்பை, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. 2011 இறுதிப் போட்டியில் அவர் மேட்ச் வின்னிங் சிக்ஸரை அடித்தார். 2010 மற்றும் 2016 ஆசிய கோப்பையிலும் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

கூடுதலாக, அவரது தலைமையின் கீழ், இந்தியா 2010 மற்றும் 2011 ICC Test mace மற்றும் 2013 ஐசிசி ஒருநாள் சாம்பியன்ஷிப்பை வென்றது. தோனி விக்கெட் கீப்பிங்கிலும் பல சாதனைகளை படைத்துள்ளார். அவரது அமைதியான கேப்டன்சி மற்றும் கடினமான சூழ்நிலைகளில் போட்டிகளை முடிக்கும் திறனுக்காக இன்றளவும் கொண்டாடப்படுபவர்.

தற்போது சிஎஸ்கே அணியை வழிநடத்தி வருகிறார்.

WhatsApp channel

டாபிக்ஸ்