தமிழ் செய்திகள்  /  Sports  /  Mohammed Siraj Replaces Injured Jasprit Bumrah In T20i Squad For Sa T20is

Siraj replaces bumrah:அடித்தது அதிர்ஷ்டம்! பும்ரா இடத்தில் சிராஜ் தேர்வு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 30, 2022 11:10 PM IST

காயம் காரணமாக ஜஸ்ப்ரீத் பும்ரா வெளியேறிவிட்ட நிலையில் அவருக்கு பதிலாக தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்த ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் தேர்வு
தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்த ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் தேர்வு

ட்ரெண்டிங் செய்திகள்

பெளலர்களுக்கு சொர்க்கபுரியாக அமைந்திருந்த திருவனந்தபுரம் ஆடுகளத்தில் நடைபெற்ற தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியாவின் ஸ்டிரைக் பெளலராக ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடவில்லை.

பயிற்சியின்போது முதுகு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் விளையாடவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதால் ஆறு மாதம் வரை ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 

இதனால் பும்ரா டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ஏற்கனவே டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியின் முகமது ஷமி, தீபக் சஹார் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளார்கள். இவர்களில் யாரேனும் அணியில் சேர்க்கப்படுவார்கள் எனவும், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் பந்து வீச்சில் கலக்கி வரும் முகமது சிராஜ் சேர்க்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான எஞ்சிய இரண்டு டி20 போட்டிகளில் முகமது சிராஜ் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

ஆனால் டி20 உலகக் கோப்பை தொடரில் பும்ராவுக்கு பதிலாக இன்னும் மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. 

கடந்த வாரம் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முகமது ஷமி சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் அந்த தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் தொங்கும் முன் முகமது ஷமி குணமாகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்த கொரோனா சிகிச்சையில் இருந்து வந்தார். 

இதனால் ஷமியால் அணிக்கு திரும்ப முடியாத நிலையில் தீபக் சஹார் சேர்க்கப்பட்டார். தற்போது பும்ராவும் விலகியிருப்பதால் அவர் இடத்தில் சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்