தமிழ் செய்திகள்  /  Sports  /  Miw Vs Dcw: Delhi Capitals Retaliated Against Mumbai Team! Finish In 9 Overs

MIW vs DCW:மும்பை அணிக்கு பதிலடி கொடுத்த டெல்லி கேபிட்டல்ஸ்! 9 ஓவர்களில் Finish

Manigandan K T HT Tamil
Mar 20, 2023 09:54 PM IST

WPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ்.

டெல்லி கேப்டன் மெக் லான்னிங்
டெல்லி கேப்டன் மெக் லான்னிங் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 109 ரன்களில் சுருண்டது. 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கியது.

9 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது டெல்லி.

முதலில் களமிறங்கிய மெக் லான்னிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார்.

ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 33 ரன்கள் எடுத்தபோது ஹேலே மாத்யூஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அலைன் கேப்சி 38 ரன்கள் விளாசினார்.

இவ்வாறாக அந்த அணி 9 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

ஏற்கனவே டெல்லி அணியை மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

தற்போது டெல்லி அணி மும்பைக்கு பதிலடி கொடுத்துள்ளது.

முன்னதாக, மும்பை தரப்பில் யஸ்திகா பாட்டியா 1 ரன்னிலும், ஹேலே மாத்யூஸ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

பின்னர் வந்த பிரண்டும் டக் அவுட்டானார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 23 ரன்களில் நடையைக் கட்டினார். அமெலியா கெர் 8 ரன்களிலும், பூஜா வஸ்த்ரகர் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

டெல்லி தரப்பில் மிரஸான்னே காப், ஷிகா பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஜெமிமா ஹர்மன்ப்ரீத் கேட்சை அட்டகாசமாக பிடித்து பாராட்டுகளை பெற்றார்.

இவ்வாறாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களில் சுருண்டது.

தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறு நடை போட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது மும்பை.

எனினும் அந்த அணியை கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் வீழ்த்தியது யு.பி.வாரியர்ஸ். தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடனும் தோல்வியைத் தழுவியுள்ளது.

இதனிடையே, புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் 2வது இடத்தைப் பிடித்தது.

WhatsApp channel

டாபிக்ஸ்