Carlsen: உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற மேக்னஸ் கார்ல்சன் - ரஷ்ய செஸ் ஜாம்பவான் கூறிய அட்வைஸ்
மேக்னஸ் கார்ல்சன் 21 சுற்றுகளில் 6 புள்ளிகளுடன் பிளிட்ஸ் பட்டத்தை தனது விரைவான மகுடத்துடன் சேர்த்தார்
உஸ்பெகிஸ்தானின் சமர்கந்தில் நேற்று நடந்த உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மிக விரைவாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார், மேக்னஸ் கார்ல்சன்.
ஒரு மோசமான தொடக்கத்திலிருந்து மீண்ட மேக்னஸ் கார்ல்சன், 21 சுற்றுகளில் இருந்து 16 புள்ளிகளைப் பெற்றார். இதனால் ரஷ்ய கிராண்ட் மாஸ்டர்களான டேனில் டுபோவ் (15.5 புள்ளிகள்) மற்றும் விளாடிஸ்லாவ் ஆர்டெமியேவ் (15 புள்ளிகள்) ஆகியோர் அடுத்தடுத்த புள்ளிகள் மூலம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 32 வயதான நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன், இவ்வாறு தனது இரண்டு மகுடங்களையும் பாதுகாத்து ஒட்டுமொத்தமாக தனது 17ஆவது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார். அனைத்து வடிவங்களிலும் தனது ஆதிக்கத்தை அதிகரித்துள்ளார், மேக்னஸ் கார்ல்சன் (அவர் 5 கிளாசிக்கல் பட்டங்கள், 5 ரேபிட் மற்றும் 7 பிளிட்ஸ் செஸ் பட்டங்களை வென்றுள்ளார்).
இந்த வெற்றிக்குப் பிறகு ரஷ்ய செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் கார்ல்சனை வெகுவாகப் பாராட்டினார். "இந்த கட்டத்தில் மேக்னஸுக்கு ஒரு பயிற்சியாளர் தேவையில்லை, அதிக கோப்பைகளை வெல்ல அவருக்கு ஒரு தச்சர் தேவை(வழிகாட்டி)" என்று காஸ்பரோவ் ஒரு எக்ஸ் இடுகையில் கூறினார்.