The Tennis Hall of Fame: உச்சபட்ச அங்கீகாரம்-டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு தேர்வான இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர்கள்!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  The Tennis Hall Of Fame: உச்சபட்ச அங்கீகாரம்-டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு தேர்வான இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர்கள்!

The Tennis Hall of Fame: உச்சபட்ச அங்கீகாரம்-டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு தேர்வான இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர்கள்!

Manigandan K T HT Tamil
Dec 13, 2023 05:38 PM IST

International Tennis Hall of Fame அமெரிக்காவில் உள்ளது. இது டென்னிஸ் விளையாட்டிற்கு வீரர்கள் மற்றும் பிற பங்களிப்பாளர்களை கவுரவிக்கிறது

இந்திய டென்னிஸ் முன்னாள் வீரர்கள் விஜய் அமிர்தராஜ், லியாண்டர் பயஸ், பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மற்றும் வரலாற்றாசிரியரான ரிச்சர்ட் எவன்ஸ்
இந்திய டென்னிஸ் முன்னாள் வீரர்கள் விஜய் அமிர்தராஜ், லியாண்டர் பயஸ், பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மற்றும் வரலாற்றாசிரியரான ரிச்சர்ட் எவன்ஸ் (@TennisHalloFame)

அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள ஹால், 1955 முதல் செயல்பட்டு வருகிறது. இது டென்னிஸ் விளையாட்டிற்கு வீரர்கள் மற்றும் பிற பங்களிப்பாளர்களை கௌரவிக்கின்றது .

பங்களிப்பாளர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமிர்தராஜ் மற்றும் பிளேயர் பிரிவில் லியாண்டர் பயஸ் இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவின் முதல் உறுப்பினர்கள். இந்தியா இங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படும் 28 வது நாடு ஆகும்.

இரண்டு கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற சீன வீராங்கனையான லீ நா, 2019 இல் சேர்க்கப்பட்டபோது சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் முதல் ஆசிய உறுப்பினரானார்.

லியாண்டர் பயஸின் தேர்வு இரண்டு வருடமாக பிளேயர் பிரிவில் யாரும் தேர்வு செய்யப்படாமல் இருந்துவந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

"மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக டென்னிஸில் எனது நாட்டிற்காக விளையாடுவது எனது வாழ்க்கையில் மரியாதை உள்பட, அது எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெறுவது எனக்கு மட்டுமல்ல, நமது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் சொந்தமானது" என்று பயஸ் கூறினார்.

அவர் இரட்டையர் பிரிவில் எட்டு பெரிய சாம்பியன்ஷிப்களையும், கலப்பு பிரிவில் 10 சாம்பியன்ஷிப்களையும் வென்றார் மற்றும் டென்னிஸ் வரலாற்றில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாடிய மூன்று பேரில் ஒருவராக உள்ளார்.

ஆடவர் சுற்றுப்பயணத்தில் பயஸ் மொத்தம் 55 இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் 37 வாரங்கள் ஏடிபி இரட்டையர் தரவரிசையில் நம்பர் 1 வீரராக இருந்தார்.

இந்தியாவுக்காக அவர் பெற்ற 45 டேவிஸ் கோப்பை இரட்டையர் போட்டி வெற்றிகள் ஒரு சாதனையாகும், மேலும் அவர் ஏழு கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.

அமிர்தராஜ் 1970கள் மற்றும் 1980களில் ஒரு தொழில்முறை வீரராக இருந்தார், அவர் 1974 மற்றும் 1987 இல் டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியாவுக்கு உதவினார். 1974 ஆம் ஆண்டில், நிறவெறிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசிச் சுற்றை அணி புறக்கணித்தது. அவரது விளையாட்டு வாழ்க்கைக்குப் பிறகு, டென்னிஸ் வர்ணனையாளராக உள்ளார்.

எவன்ஸ் 1960 ஆம் ஆண்டு முதல் டென்னிஸில் 200 க்கும் மேற்பட்ட கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் மற்றும் பிற நிகழ்வுகளை உள்ளடக்கியதாக கவர் செய்துள்ளார், மேலும் 20 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் சர்வதேச டென்னிஸ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், 2001-04 வரை அதன் தலைவராகவும் இருந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.