தமிழ் செய்திகள்  /  Sports  /  Jasprit Bumrah Ruled Out Of T20 World Cup With Back Stress Fracture

T20 worldcup 2022: முதுகில் காயம் காரணமாக பும்ரா விலகல்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 29, 2022 11:04 PM IST

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமா இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஐஸ்ப்ரீத் பும்ரா டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக பிரபல செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது.

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய பும்ரா
காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய பும்ரா (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியா - தென்ஆப்பரிக்கா இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதகு வலி காரணமாக பும்ரா பங்கேற்கவில்லை. பயிற்சியின்போது முதுகு வலி ஏற்பட்ட நிலையில், அவருக்கு முதல் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பும்ராவின் காயம் குணமாவதற்கு அவருக்கு போதிய ஓய்வு தேவை இருப்பதால், டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்திய ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலையில், தற்போது இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவும் விலகியிருப்பது, இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரை பும்ரா கண்டிப்பாக விளையாடப்போவதில்லை எனவும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் மிகவும் சீரியஸானது எனவும், ஆறு மாத காலம் வரை ஓய்வு தேவைப்படும் என பிசிசிஐ மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவே பும்ரா ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை. இதன் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 2 மற்றும் 3வது போட்டிகளில் பங்கேற்றார்.

அந்த வகையில் பும்ராவுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்றாலும், சில மாதம் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது என்சிஏ சென்றுள்ள பும்ராவின் உடல்நிலை அறிக்கைக்கு பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை தொடர் பிரதான அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், ஐஸ்ப்ரீத் பும்ரா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். முகமது ஷமி, தீபக் சஹார் ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக உள்ளனர். இதையடுத்து பும்ரா வெளியேறும்படசத்தில் ஷமி அல்லது சஹார் ஆகியோரில் யாராவது ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களை தவிர தற்போது இங்கிலாந்தின் வார்விக்சைர் கவுண்டி அணிக்காக விளையாடி வரும் முகமது ஷிராஜின் பெயரும் அடிபடுகிறது. விரைவில் பும்ராவுக்கான மாற்று வீரர் யார் என்பதன் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்