தமிழ் செய்திகள்  /  Sports  /  January Sports Rewind Cricket Tennis Table Tennis Many Read More Details

January Sports Rewind: மெஸ்ஸி முதல் ரோகன் போபண்ணா வரை.. ஜனவரியில் முக்கிய விளையாட்டு நிகழ்வுகள்

Manigandan K T HT Tamil
Jan 31, 2024 07:00 AM IST

Sports: 2024 ஜனவரி மாதம் விளையாட்டுத் துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை காண்போம்.

ஸ்போர்ட் ரீவைண்ட் 2024
ஸ்போர்ட் ரீவைண்ட் 2024

ட்ரெண்டிங் செய்திகள்

ஜன. 2: அல்டிமேட் கோ கோ சென்னை குயிக் கன்ஸ், ஒடிஸா ஜாகர்நட்ஸ் இடையே நடந்த 17வது ஆட்டம் 30-30 என்ற கணக்கில் டை ஆனது.

ஜன. 4: ஸ்டம்பிங் மேல்முறையீடு மற்றும் concussion substitutes குறித்த விதி மாற்றங்கள் டிசம்பர் 12, 2023 முதல் நடைமுறைக்கு வந்தன.

ஜன. 5: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடைபெறாத நிகழ்வாக இந்த போட்டியானது முழுமையாக இரண்டு நாள்கள் கூட நடைபெறாத நிலையில், 5 செஷனில் முடிவுக்கு வந்தது SA vs IND 2வது டெஸ்ட். இது கேப்டவுனில் நடந்தது.

ஜன. 6: பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டிலும் ஆஸி., வெற்றி பெற்றது. ஆஸி., வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார். 

ஜன. 7: ஆப்கனுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். விராட் கோலியும் அணியில் இடம்பிடித்தார்.

ஜன. 8: ஆப்கனுக்கு எதிரான தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். ரோகித் சர்மா மீண்டும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜன. 9: 'கேப்டவுன் டெஸ்ட் பிட்ச் திருப்திகரமாக இல்லை'-டிமெரிட் புள்ளியை வழங்கியது ஐசிசி

ஜன. 9: கொழும்பில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜன. 9: ஷமி, வைஷாலி உள்ளிட்ட 26 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவம்.

ஜன. 9: இந்தியாவுக்கு எதிரான வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர்களை ஆஸ்திரேலியா மகளிர் வென்று அசத்தியுள்ளது. ஒரு நாள் தொடரை முழுமையாகவும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.

ஜன. 10:  முதுகு வலியால் அவதிக்குள்ளாகி வரும் ஆப்கானிஸ்தான் பவுலிங் ஆல்ரவுண்டரான ரஷித் கான், அணியுடன் இந்தியாவுக்கு வந்திருந்தபோதிலும் டி20 தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன. 10: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இந்தியாவில் தேர்தல் நடைபெறும் நிலையில், நடைபெற வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஜன. 10: டேவிட் வார்னரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் 'ஜாம்பவான்' என்று வகைப்படுத்த அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் புகேனன் மறுத்துவிட்டார்.

ஜன. 11: ஆப்கனுக்கு எதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.

ஜன. 12: பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

ஜன. 13: அல்டிமேட் கோ கோ சீசன் 2இல் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி சென்னை குயிக் கன்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஜன. 14: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ் ஞாயிற்றுக்கிழமை தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், புதன்கிழமை பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டருக்கு எதிரான மெல்போர்ன் ரெனகேட்ஸ் போட்டி அவரது கடைசி போட்டியாகும்.

ஜன. 14: 1983ஆம் ஆண்டு முதல் மலேசிய ஓபனில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் எந்த இந்திய வீரரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை. எனவே ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் கொரிய ஜோடியை வீழ்த்தி சாத்விக்-சிராக் ஜோடி வரலாறு படைத்தது. ஆனால் பைனலில் சீன ஜோடியிடம் பட்டம் வெல்லவில்லை. ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி 21-9, 18-21, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

ஜன. 14: இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான 2வது டி20 ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 15.4 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஜன. 15: பிரான்ஸ்சஸ் கிரிக்கெட்டில் அனுபவ வீரர்களை கழட்டிவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பும், பொறுப்பும் வழங்குவது சரியானது தான் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

ஜன. 16: கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா (CSA) செவ்வாயன்று நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக நீல் பிராண்டை நியமித்தது, அதே நேரத்தில் அடுத்த மாதம் டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கான தொடக்க வீரர் எட்வர்ட் மூர் உட்பட மேலும் ஏழு வீரர்களையும் சேர்த்துக் கொண்டது. இவர்கள் இதுவரை தேசிய அணிக்காக விளையாடியவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன. 17: சூப்பர் ஓவர் முறையில் இந்திய கிரிக்கெட் அணி, ஆப்கன் அணியை வீழ்த்தியது. தொடரையும் முழுமையாக கைப்பற்றியது. இந்த போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள் நடந்தது.

ஜன. 20: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸாவை விவாகரத்து செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் சோயப் மாலிக், அந்நாட்டு நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்தார்.

ஜன. 22: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார்.

ஜன. 23: ஐசிசி 2023 ஆடவர் ஒரு நாள் அணியில் ரோஹித்துடன், பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் சுப்மன் கில், சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.

ஜன. 25: இங்கிலாந்து-இந்தியா இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ஐதராபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஜன. 26: ஆஸி., ஓபனில் செர்பியா வீரர் ஜோகோவிச் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

ஜன. 26: ஜடேஜா, கே.எல்.ராகுல் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அரை சதம் விளாசினர்.

ஜன. 27: 2024 ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் இத்தாலியின் சிமோன் போலெல்லி மற்றும் ஆண்ட்ரியா வவசோரி ஜோடியை 7-6 (0), 7-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்து வரலாறு படைத்தது ரோகன் போபண்ணா ஜோடி.

ஜன. 28: யு-19 உலகக் கோப்பையில் அமெரிக்காவை வீழ்த்தியது இந்தியா. 201 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி.

ஜன. 29: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறுகிய போட்டி இதே நாளில் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையே நடைபெற்றது. வெறும் 62 பந்துகளுடன் போட்டி முடிக்கப்பட்டது.

ஜன. 30: யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முஷீர் கான் தொடர்ச்சியாக 2வது சதம் விளாசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்