Faf Du Plessis: சிஎஸ்கேவுடனான பிணைப்பு! உணர்ச்சி பொங்கிய தருணத்தை சுயசரிதையில் பகிர்ந்த டூ பிளெசிஸ்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Faf Du Plessis: சிஎஸ்கேவுடனான பிணைப்பு! உணர்ச்சி பொங்கிய தருணத்தை சுயசரிதையில் பகிர்ந்த டூ பிளெசிஸ்

Faf Du Plessis: சிஎஸ்கேவுடனான பிணைப்பு! உணர்ச்சி பொங்கிய தருணத்தை சுயசரிதையில் பகிர்ந்த டூ பிளெசிஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 23, 2023 05:15 PM IST

சிஎஸ்கே அணியுடனான தனக்கு இருக்கும் பிணைப்பு குறித்து தனது சுயசரிதை புத்தகத்தில் மிகவும் எமோஷலான தருணம் ஒன்றை குறிப்பிட்டுள்ளார், தற்போதைய ஆர்சிபி அணி கேப்டனும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான பாப் டூ பிளெசிஸ்.

Faf: Through Fire என்ற தனது சுயசரிதை புத்தகத்துடன் டூ பிளெசிஸ்
Faf: Through Fire என்ற தனது சுயசரிதை புத்தகத்துடன் டூ பிளெசிஸ்

கடந்த 2022இல் நடைபெற்ற மெகா ஏலத்தின் காரணமாக சிஎஸ்கே அணி இவரை விடுவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் மெகா ஏலத்தில் டூ பிளெசிஸ்ஸை வாங்க முயற்சித்தது. ஆனால் அது நடக்காமல் போனது சிஎஸ்கே அணியை மட்டுமல்ல, ரசிகர்களையும் ஏமாற்றம் அடைய செய்தது.

தற்போது டூ பிளெசிஸ் ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில், 'Faf: Through Fire' என்ற தனது சுயசரிதை புத்தகத்தை அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சிஎஸ்கே அணி குறித்தும், அந்த அணியில் இருந்தபோது தனது அனுபவங்கள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து டூ பிளெசிஸ் கூறியிருப்பதாவது: "சிஎஸ்கே என்பது என்னை பொறுத்தவரை ஒரு கிரிக்கெட் அணியைவிட மிகப் பெரியது. எனது மூத்த மகள் தனது முதல் பாத சுவடுகளை, ஹோட்டல் ஒன்றில் சிஎஸ்கே அணியுடன் நடந்த கொண்டாட்டத்தின்போது தான் எடுத்து வைத்தாள்.

அதன் பின்னர் ஒர் ஆண்டு கழித்து அதே ஹோட்டலில் தங்கியிருந்தபோது அவள் டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பெரும்பாலான நேரத்தை நான் அவளுடன்தான் செலவிட்டேன். அந்த நேரத்தில் சிஎஸ்கே நிர்வாகத்தின் ஊழியர்கள், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தங்களது பொறுப்பாக எடுத்துக்கொண்டு எங்களை அரவணைத்து முழு ஆதரவும் அளித்தனர்.

அப்போது போட்டியில் பங்கேற்பதற்காக மருத்துவர்கள் என்னை விரைவாக அனுப்ப வேண்டியிருந்தது. அதன் பின்னர் நான் சரியான நேரத்தில் மைதானத்துக்கு சென்றுவிட்டேன். ஆனால் நான் தாமதமாக வருவேனா என்பது பற்றி கவலை கொள்ளாமல், எனது மகளும், மனைவியும் எப்படி உள்ளார்கள் என்பதை பற்றி, விசாரித்த சிஎஸ்கே நிர்வாகத்தினர், எல்லாம் சரியாக உள்ளதா என்பதை உறுதிபடுத்துவதில் ஆர்வமாக இருந்தனர். இதுதான் சிஎஸ்கே அணி என்பதிலும், அங்கிருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் நேசித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். ம

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்னர் இருந்தே டூ பிளெசிஸ் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இக்கட்டான சூழ்நிலையில் அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்ததோடு, சிஎஸ்கே அணி பெற்ற 4 ஐபிஎல் சாம்பியன் கோப்பைகளில் மூன்று கோப்பைகள் வென்ற அணியில் ஒருவராக அங்கம் வகித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.