தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Aiden Markram: இந்த சீசனில் சொதப்பி விட்டோம்-ஐதராபாத் கேப்டன் மார்க்ரம் விரக்தி

Aiden Markram: இந்த சீசனில் சொதப்பி விட்டோம்-ஐதராபாத் கேப்டன் மார்க்ரம் விரக்தி

Manigandan K T HT Tamil
May 16, 2023 11:06 AM IST

Sunrises Hyderabad: 'பவர்பிளே ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது தான் எங்களுக்கு பின்னடைவதாக ஆனது.'

ஐதராபாத் கேப்டன் மார்க்ரம்
ஐதராபாத் கேப்டன் மார்க்ரம் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

ஆட்டம் முடிவடைந்த பிறகு, ஐதராபாத் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறியதாவது:

இந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. புவனேஸ்வர் குமார், நடராஜன் அருமையா பந்துவீசினர். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பார்ட்னர்ஷிப்பை உடைத்ததில் புவனேஸ்வர்குமாருக்கு பெரும்பங்கு உண்டு.

பவர்பிளே ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது தான் எங்களுக்கு பின்னடைவதாக ஆனது.

கிளாசன் அருமையாக விளையாடி அரை சதம் பதிவு செய்தார். அது மகிழ்ச்சியாக இருந்தது. சுப்மன் கில் சிறந்த ஆட்டக்காரர். இன்னும் 2 ஆட்டங்கள் எங்களுக்கு உள்ளன. அதில் ஜெயிப்பதற்காக நிச்சயம் போராடுவோம் என்றார் எய்டன் மார்க்ரம்.

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று 62வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் குஜராத் 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பிளே-ஆஃப் சுற்றுக்குச் சென்ற முதல் அணியானது. அதேநேரம், சன்ரைசர்ஸ் ஐதராபாத் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக லீக் சுற்றுடன் வெளியேறுகிறது.

ஐதராபாத் வீரர்கள்
ஐதராபாத் வீரர்கள் (PTI)

ஐதராபாத்துக்கு ஆர்சிபி, மும்பை அணிகளுன் மட்டும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. அவை வெறும் சம்பிரதாய ஆட்டங்கள் மட்டுமே ஆகும்.

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்தது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 120 பந்துகளில் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. எனினும், அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 154 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆரம்பம் முதலே சன்ரைசர்ஸ் அணி தடுாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது. அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களிலும், அபிஷேக் சர்மா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் எய்டன் மார்க்ரம் 10 ரன்களிலும், ராகுல் திரிபாதி 1 ரன்னிலும் நடையைக் கட்டினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்