RR vs GT: முதல் இடத்துக்கான போட்டி! CSK பார்மூலாவுடன் குஜராத் அணி - Danger Zoneஇல் இருந்து ராஜஸ்தான் தப்பிக்க ஒரே வழி
சம பலம் பொருந்திய அணிகளாக இந்த சீசன் முழுவதும் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தன்னை நிருபித்து வருகிறது. கடந்த முறை மோதலில் தொடர்ச்சியாக மூன்று தோல்விக்கு பிறகு முதல் தடவையாக ராஜஸ்தான் அணி, குஜராத்தை வீழ்த்தியது. இந்த முறை வெற்றி பெறும் அணி முதல் இடத்தை பிடிக்கும்.
ஐபிஎல் 2023 தொடரின் 48வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஜெயிப்பூரில் இன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் கடந்த முறை அகமதாபாத்தில் மோதிக்கொண்ட போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பினிஷர் ஹெட்மேயரின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் இன்று பலப்பரிட்சை செய்ய உள்ளன. கடைசி கட்ட ஓவர் ஸ்டிரைக் ரேட், ஸ்பின் மற்றும் வேகப்பந்து வீச்சு, பேட்டிங் பலம் என இரண்டு அணிகளுக்கும் ஏராளமான ஒற்றுமையான விஷயங்கள் உள்ளன.
நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக செயல்படும் கேப்டன், எதிரணியை அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர், பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம் சொப்பணமாக இருந்து வரும் ஸ்பின்னர் என சிஎஸ்கே அணியில் காலகாலமாக இருந்து வரும் பார்மூலாவை பின்பற்றி செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.
பேட்டிங்கில் தொடரின் ஆரம்பகட்டத்தில் சுப்மன் கில், சாய் சுதர்சன் போன்ற இளம் வீரர்கள் ஜொலித்தனர். தற்போது மிடில் ஆர்டரில் பேட் செய்யு வரும் விஜய் சங்கர் தனது பவுர்புஃல் ஆட்டத்தால் எதிரணியை கலங்கடிக்கிறார். முழுமையான அணியாக இருந்து வரும் குஜராத், சம பலத்துடன் உள்ள ராஜஸ்தானை வீழ்த்த வியூகம் அமைப்பதை காட்டிலும், மிக முக்கியமான ஒவ்வொரு வீரர்களும் தங்களது பணியை சரியாக செய்தாலே போதுமானதாக அமையும்.
ஏனென்றால் ராஜஸ்தானிடம் அடிபட்டது மட்டுமல்லாமல், கடந்த போட்டியிலும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லியிடம் முதல் இடத்தில் இருந்தும் தோல்வி அடைந்த அணியாக குஜராத் உள்ளது.
எனவே தோல்வியிலிருந்து மீண்டு தன்னை டாப் அணி என தனது இடத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய சூழல் குஜராத் அணிக்கு உருவாகியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை சிறந்த டி20 போட்டிகளை இந்த சீசனில் விளையாடி வருகிறது. ஒவ்வொரு அணியையும், அவர்களின் பலம், பலவீனத்தை கண்டறிந்து வியூகம் அமைத்து வீழ்த்தி வருகிறார் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்.
பேட்டிங், பெளலிங், பினிஷிங் என முழுமையான அணியாக இருந்து வரும் ராஜஸ்தானும், தனது கடைசி போட்டியில் மும்பைக்கு எதிராக சறுக்கலை சந்தித்துள்ளது. 200 ரன்களுக்கு மேல் அடித்தபோதிலும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியால் புள்ளிப்பட்டியில் இருந்து கீழே இறங்கியது.
தற்போது 4வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி, தோல்வியை தழுவினால் அடுத்த வரும் போட்டிகளின் முடிவுகளால் டாப் 4 இடத்தை இழக்க நேரிடும்.
எனவே அபாய கட்டத்தில் இருந்து வரும் அந்த அணி அதிலிருந்து தப்பி ஒரே வழியாக இருப்பது குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெறுவது மட்டுமே. இதை தவறும்பட்சத்தில், அடுதடுத்து நான்கு இடங்களில் உள்ள அணிகள் ராஜஸ்தானுக்கு கடுமையான போட்டியாக அமையக்கூடும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த முறை ஜெய்ப்பூர், குவாஹட்டி என இரண்டு மைதானங்கள் உள்ளூர் மைதானமாக அமைந்துள்ளது. இதில் இரு மைதானங்களிலும் மொத்தமாக விளையாடிய நான்கு போட்டிகளில் ஜெய்ப்பூர் 1, குவாஹாட்டி 1 என 2 போட்டிகளில் வெற்றியை கண்டுள்ளது.
எனவே உள்ளூர் சாதகத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நன்கு பயன்படுத்தி கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
ஆடுகளம் எப்படி?
பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் இந்த ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சாத்திதுள்ளனர். ஸ்பின்னர்கள் பெரிதாக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் எகானமிக்காலாக பெளலிங் செய்துள்ளனர். மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த போட்டிகளில் பயன்படுத்தாக ஆடுகளம் இன்றைய போட்டியில் இடம்பெறும் என கூறப்படுவதால், ஒரு பக்கம் பவுண்டரி கொஞ்சம் சிரியதாக இருக்கும் என தெரிகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் 3, ராஜஸ்தான் 1 முறை வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கு தங்களது கடைசி போட்டியில் தோல்வியடைந்து இருப்பதால் வெற்றிக்காக விஸ்வரூபம் எடுக்கும் என நம்பலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்