DC vs PBKS: பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் வந்தார்கள் சென்றார்கள்- சதமடித்து காப்பாற்றிய பிரப்சிம்ரன் சிங்
இந்த சீசனில் பேட்டிங்கில் கலக்கி வரும் பஞ்சாப் ஓபனர் பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக பேட் செய்து சதமடித்தார். அவரை தவிர மற்ற பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்காமல் ஏமாற்றினர்.

ஒற்றை ஆளாக பஞ்சாப் அணியை மீட்டெடுத்த பிரப்சிம்ரன் சிங் (AFP)
ஐபிஎல் 2023 தொடரின் 59வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுத்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக பேட் செய்து சதமடித்தார். அவரை தவிர மேலும் இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டும் இரட்டை இலக்கை ரன்னில் ஸ்கோர் செய்த நிலையில், மற்ற பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.
ஒரு புறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து காலியாகி கொண்டிருக்க பிரப்சிம்ரன் சிங் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு கம்பெனி கொடுக்க யாரும் இல்லாத போதிலும், ஒற்றை ஆளாக பவுண்டரி, சிக்ஸர் என பறக்க விட்டார்.