தமிழ் செய்திகள்  /  Sports  /  Nitish Rana Named Kkr Captain In Place Of Injured Iyer

IPL 2023: KKR-இல் எத்தனை வருஷமா நிதிஷ் ராணா விளையாடுகிறார் தெரியுமா?

Manigandan K T HT Tamil
Mar 28, 2023 03:40 PM IST

KKR Captain Nitish Rana: கொல்கத்தா அணிக்கு யார் கேப்டன் என்ற கேள்வி அந்த அணியின் ரசிகர்களுக்கு இருந்தது. அதற்கு விடையளிக்கும் வகையில் அந்த அணி நிர்வாகம் நிதிஷ் ராணாவை கேப்டனாக நியமித்துள்ளது.

நிதிஷ் ராணா
நிதிஷ் ராணா (@KKRiders)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதால் அவரால் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடியாமல் போகும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு யார் கேப்டன் என்ற கேள்வி அந்த அணியின் ரசிகர்களுக்கு இருந்தது.

அதற்கு விடையளிக்கும் வகையில் அந்த அணி நிர்வாகம் நிதிஷ் ராணாவை கேப்டனாக நியமித்துள்ளது.

யார் இந்த நிதிஷ் ராணா?

நிதிஷ் ராணா டெல்லியில் பிறந்தவர். 29 வயது ஆகிறது. இந்திய அணியில் ஒரு நாள், டி20 ஆட்டங்களில் கடந்த 2021ம் ஆண்டு அறிமுகமானார்.

இடதுகை பேட்ஸ்மேன். 2018ம் ஆண்டில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

டெல்லி அணியை உள்ளூர் கிரிக்கெட்டில் வழிநடத்தியிருக்கிறார்.

நிதிஷ் ராணா மீது நம்பிக்கை இருக்கிறது. அவர் கொல்கத்தா அணியை சிறப்பா வழிநடத்துவார். ஐபிஎல் நடந்துகொண்டிருக்கும்போதே ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டு வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்தது.

நிதிஷ் ராணா கூறுகையில், "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2018ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறேன். அந்த அணியை வழிநடத்துவதில் பெருமை கொள்கிறேன். என்னுடைய லீடர்ஷிப் திறமையை காண்பிப்பதற்கான சரியாக வாய்ப்பாக இதை நான் பயன்படுத்திக் கொள்வேன். ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன் என்றார் நிதிஷ் ராணா.

நிதிஷ் ராணா டெல்லி அணியை 12 டி20 ஆட்டங்களில் சையது முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்காக வழிநடத்தியிருக்கிறார்.

அதில் 8 ஆட்டங்களில் டெல்லி அணி வெற்றி பெற்றது. 4 ஆட்டங்களில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL)எனப்படும் ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள 16வது சீசன் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

WhatsApp channel

டாபிக்ஸ்