தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rcb வெற்றி-சின்னசாமி ஸ்டேடியத்தில் ரன் மழை பொழிந்த கோலி-பிளெஸ்ஸிஸ் கூட்டணி!

RCB வெற்றி-சின்னசாமி ஸ்டேடியத்தில் ரன் மழை பொழிந்த கோலி-பிளெஸ்ஸிஸ் கூட்டணி!

Manigandan K T HT Tamil
Apr 02, 2023 11:09 PM IST

Virat Kohli: தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி, ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் ஆகியோர் அசத்தலாக விளையாடி அரை சதம் பதிவு செய்தனர்.

ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ்-விராட் கோலி
ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ்-விராட் கோலி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடியது மும்பை இந்தியன்ஸ்.

20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

120 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆர்சிபி.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி, ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் ஆகியோர் அசத்தலாக விளையாடி அரை சதம் பதிவு செய்தனர்.

148 ரன்கள் வரை விக்கெட் இல்லாமல் ஆர்சிபி விளையாடியது. எனினும், அர்ஷத் கான் பந்துவீச்சில் பந்தை தூக்கி அடித்தபோது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் டூ பிளெஸ்ஸிஸ் அப்போது அவர் 43 பந்துகளில் 73 ரன்களை எடுத்திருந்தார்.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் ரன்களின்றி ஆட்டமிழந்தார். பின்னர் கிளென் மேக்ஸ்வேல் 2 சிக்ஸர்களை விளாச மறுமுனையில் தோனி சிக்ஸரை விளாசி வெற்றி இலக்க எட்ட உதவினார். இவ்வாறாக 16.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து ஆர்சிபி வெற்றி பெற்றது. கோலி 38 பந்துகளில் அரை சதம் விளாசினார். இது அவருக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் 45வது அரை சதம் ஆகும். கடைசி வரை ஆட்டமிழக்காமல் கோலி, 49 பந்துகளில் 82 ரன்கள் பதிவு செய்தார்.

கோலி-பிளெஸ்ஸிஸ் கூட்டணி 100 ரன்களை கடந்தது. இதுவே இந்த சீசன் ஐபிஎல்-இல் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை கடந்த முதல் பார்ட்னர்ஷிப் ஆகும்.

முன்னதாக, கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் நடையைக் கட்டி அதிர்ச்சி கொடுத்தனர். ரோகித் 1 ரன்னிலும், கிஷன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேமரூன் கிரீன் 5 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த திலக் வர்மா நிதானமாக விளையாடினார். நெஹல் வதேராவும் அவருடன் பார்ட்னர்ஷிப்பில் இருந்தார்.

அணியின் ஸ்கோர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. இதனிடையே, கர்ண் ஷர்மா பந்துவீச்சில் நெஹல் 21 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். பின்னர், வந்த டிம் டேவிட்டும் 4 ரன்களில் நடையைக் கட்டினார்.

தனியொரு வீரராக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரன் வேட்டையில் ஈடுபட்ட திலக் வர்மா அரை சதம் விளாசினார்.

அணியின் ஸ்கோரும் மூன்று இலக்கங்களை கடந்தது.

கர்ண் ஷ்ரமா 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிட்செல் பிரேஸ்வெல் 1 விக்கெட்டையும் ஆகாஷ் தீப் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சிராஜ், ரீஸ் டோப்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இவ்வாறாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது.

WhatsApp channel

டாபிக்ஸ்