Dhoni: ஐபிஎல்-இல் இத்தனை ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் தோனிதான்!
Chennai Super Kings: இவரது தனிநபர் அதிகபட்சம் 84. ஸ்டிரைக் ரேட் 135.96. பவுண்டரிகள் 349 விளாசியிருக்கிறார். சிக்ஸர்கள் 239 ஆகும்.

ஐபிஎல் வரலாற்றில் 250 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி.
250 ஆட்டங்களில் விளையாடியுள்ள தோனி, 5082 ரன்களை குவித்துள்ளார். இவரது தனிநபர் அதிகபட்சம் 84. ஸ்டிரைக் ரேட் 135.96. பவுண்டரிகள் 349 விளாசியிருக்கிறார். சிக்ஸர்கள் 239 ஆகும்.
16வது சீசன் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தப் போட்டி கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கியது.
நேற்று முடிவடைய வேண்டியது. அகமதாபாத்தில் மழை காரணமாக இன்று பைனல் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இன்று டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்து வருகிறது குஜராத் டைட்டன்ஸ்.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது. அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. சிஎஸ்கே 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆகியுள்ளது.
முதல் சீசனில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், அதன்பிறகு ஒரு முறை கூட ஐபிஎல் டைட்டிலை வெல்லவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறை (2012, 2014) டைட்டிலை ஜெயித்துள்ளது. ஐதராபாத் அணி ஒரு முறை (2016) வென்றுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் நடப்பு சாம்பியன் ஆகும். இந்த போட்டியில் வென்றால் குஜராத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெறும்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பைனல் கோலாகலமாக தொடங்கியது. இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து 7 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸில் ஜெயித்த சிஎஸ்கே பவுலிங்கைத் தேர்வு செய்தது.
அப்போது சிஎஸ்கே கேப்டனிடம் ஏன் பவுலிங்கை தேர்வு செய்தீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "மழை முன்னறிவிப்பு இருப்பதால் நாங்கள் முதலில் பந்துவீச முடிவு செய்திருக்கிறோம். நேற்று நாங்கள் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தோம். ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் எப்போதும் விளையாட விரும்புகிறோம். ரசிகர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்களை மகிழ்விக்க முடியும் என்று நம்புகிறோம். பிட்ச் நீண்ட நேரமாக மூடப்பட்டிருந்தது. பிளேயிங் லெவனில் மாற்றமில்லை" என்றார்.
சிஎஸ்கேவுக்கு இது 10வது ஐபிஎல் பைனல் ஆகும். சிஎஸ்கே இதுவரை 4 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. குஜராத் அணி நடப்பு சாம்பியனாக உள்ளது. இந்த ஆண்டும் வெற்றி பெற்றால் இரண்டு முறை தொடர்ச்சியாக சாம்பியன் ஆகும்.
ஐபிஎல் 2023 சீசன் தொடங்கிய இடத்தில் முடிவுக்கும் வந்தடைந்துள்ளது. முதல் போட்டியில் விளையாடிய அதே அணிகளே இறுதிப் போட்டியிலும் விளையாடவுள்ளன. இதில் ஒரு அணி புதிய சாதனை படைக்கவும், மற்றொரு அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆதிக்கத்தை செலுத்தவும் தயாராக உள்ளன.

டாபிக்ஸ்